குறிப்பாக ஒவ்வொருவரது சிந்தனை, செயற்திறன் மற்றும் சூழலியல் வகிபாத்திரம் என்பன தனிநபர் தொடக்கம் குழுக்கள் வரையான மாறுபட்ட நிலையை அடைகின்றன. இந்நிலைப்பாடுகள் ஒருவர் மீதான புரிதல், பற்றுதல் மற்றும் எதிர்த்தல் போன்ற உளவியல் பிணைப்புகள் மீது செல்வாக்குச் செலுத்தும்.
சமுதாய மட்டத்தில் நாம் அவதானிக்கும், கேள்வியுறும் மற்றும் கற்பனை செய்யும் ஒருவரின் நிஜவாழ்வியல் நாம் எண்ணுவதை போன்று ஒருபோதும் முழுக்க முழுக்க அமைந்துவிடாது. அது நாம் குறித்த நபருடன் கொண்டிருக்கும் ஆளிடைத்தொடர்பை பொறுத்து அவர் மீதான உண்மையான வாழ்க்கை முறைமை மற்றும் அவர் மீதான அவதானிப்பு ஆழமடையும்.
எந்தவொரு மனிதனும் தனது உண்மை முகத்தை அவனது குடும்ப சூழலிலேயே வெளிப்படையாக வெளிக்காட்டுவான். பொதுத்தள உறவாடலில் அவன் தன்னை பற்றிய மாய விப்பத்தையும், அதனை கட்டமைக்கும் தோற்றப்பாடுகளையுமே உருவாக்க எத்தனிக்கின்றான். இந்நிலையில்தான் அவனது சமூக வாழ்வியல் மற்றவரை சார்ந்து திருப்திப்படுத்தும் நிலைமை உண்டாகின்றன.
எது எவ்வாறாயினும் ஒவ்வொருவர் பற்றிய ஒவ்வொருவரின் பார்வைகளின் பல்லினம்தான் ஒரு மனிதன் பற்றிய சரியான அடையாளத்தை உண்டாக்கிடும் கட்டுமானத்தை தோற்றுவிக்கின்றது. இதனை பலர் புரிந்துகொள்வதில் எதிர்நோக்கும் சிக்களால்தான் தன்னை பற்றிய தாழ்வு மனப்பாங்கையும், மிகை உயர்வுநிலை மனப்பாங்கையும் உருவாக்கிக்கொள்ள ஏதுவாகின்றது.
No comments:
Post a Comment