#அட்டைப்_பூச்சி_மருத்துவம் (Leech Therapy)
அட்டைபூச்சி தெரபி பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஈரானை பூர்வீமாக கொண்ட இந்த மருத்துவ முறை யூனானி மருத்துவத்தின் ஒரு பகுதியாகும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் மூலமாகவே இம்முறை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் இந்த வைத்தியம் பிரபலமாக பரவியிருந்தது. லீச் மருத்துவம் வெறுமனே மருத்துவத்திற்கு மட்டுமன்றி அது போதையை உண்டாக்கும் முறையாகவும் சட்டவிரோத நிலையங்களில் உபயோகிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக நவீன மருத்துவங்கள் வளர்ச்சியடைந்ததும், இந்த அட்டை தெரபி நலிவடைந்தது. எனினும் 1960 பிறகு சில பகுதிகளில் இந்த அட்டை பூச்சி தெரபியை மீண்டும் ஆரம்பிக்கின்றனர். இதில் பல்வேறு நோய்களை அட்டைப் பூச்சி தீர்க்கிறது. இந்த வைத்தியத்திற்கு ஹிருடோதெரபி என்று பெயர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் அட்டைப்பூச்சிகளை நேரடியாக விட்டுவிடுவார்கள். இவை இதய நோய்களுக்கு, இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கு, முகப்பரு, சொட்டை முடியில் முடி வளர என பல்வெறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.
👉 வெரிகோஸ் வெயின் சிகிச்சை
வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்குரிய சிகிச்சை
எம்மில் ஒரு சிலருக்கு கால் பகுதியில் நரம்புகள் முடிச்சு போட்டு புடைத்து இருப்பதைக் கண்டிருக்கிறோம். வெரிகோஸ் வெயின் என்ற இந்த குருதிக்கலன் சுருள் பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை. சுருக்கமாக இதயத்திற்கு அசுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்கள் வீக்கமடைவதற்கு தான் வெரிகோஸ் வெயின் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசையாமல் நின்றபடியே பணியாற்றுவது, கால்களை தொங்கப்போட்டுக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை செய்வது, இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருப்பது போன்ற சில காரணங்களால் இவை ஏற்படுகின்றன.
இவ்வித பிரச்சினைக்கு லீச் தெரபி என்ற ஒரு சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இவைமனித உடலிலிருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்பவை என்பதால் இருபது முதல் முப்பது அமர்வுகளில் இத்தகைய அட்டைப் பூச்சியைக் கொண்டு எம்மிடமுள்ள அசுத்தமான இரத்தத்தை அப்புறப்படுத்துகிறார்கள்.
👉 ஆறாத காயங்களை குணப்படுத்தல்
முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. உடலில் செல்லிறப்பு அதிகமாக இருந்தால், அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்த அட்டைப் பூச்சிகள் அவைகளுக்கு தூண்டுதல் அளித்து, வேகமாக செயல்பட வைக்கிறது.
லீச் மருத்துவம் உபயோகிக்கப்படும் முறைகள்
👉 Osteoarthritis என்னும் என்புகள், மூட்டுகள் சார்ந்த வலி நிவாரணியாக உபயோகித்தல்.
👉 Shingles எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படும் தோல் நோய்க்கு சிகிச்சையாக பயன்படும்.
👉 உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் இந்த லீச் தெரபி பயன்படும்.
அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன. அதேபோல், அதன் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
லீச் அட்டையின் உடலில் ஹிருடின் (Hirudin) என்ற புரதம் உள்ளது. அவை புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவும் அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. மூட்டு சம்பந்தப்பட்ட நோயான ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸை குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயில் சொல்லத்தகுந்த முன்னேற்றம் கொடுக்கிறது.
ஆனால் அட்டைப்பூச்சி தெரபியை தகுந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களே கையாள வேண்டும். ஏனெனில் இவை அலர்ஜி, தழும்பு, சரும எரிச்சல், நீடித்த இரத்தப்போக்கு மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பக்கவிளைவுகளையும் கொடுக்கும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
No comments:
Post a Comment