"அன்பே சிவம்" என்பதான் இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த குறிக்கோளாகும். சமயங்கள், கலாசாரங்கள், மதங்கள் யாவும் அன்பே சிவமென்ற ஓரிறைக் கொள்கையின் ஊடாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அன்புதான் ஒட்டுமொத்த உயிரியல் சாம்ராஜ்ஜியத்தின் உயிர்நாடி.
சமூக சூழலில் அவ்வப்போதுகளில் காட்டுமிராண்டிகளாலும் கடும்போக்குவாதிகளாலும் குழப்பங்கள் விளைவிக்க தான் நிகழ்கின்றன. ஒரு தனிமனித அல்லது ஒரு சிறு குழுவினரின் கடும்போக்கான வன்முறைகள் ஒட்டுமொத்த சாராரையும் குற்றம் சுமத்தும் காலக் கண்ணாடியாக தற்போது பிரதிபிம்பம் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட சமூகம் உணர்ச்சிவசப்பட்டு அறிவிழப்பு நிந்தனைக்கு தூண்டப்படும் செயற்பாடுகள் எப்போதுமே மதரீதியான தாக்குதலில் தொடங்கி வைக்கப்படுகின்றது.
ஒவ்வொரு சமூகத்திலும் கடும்போக்குவாதிகளும், காடையர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு விடயத்தை பூதாகரமாக்கி சமூகவியல்சார் எதிர் விளைவுகளை உண்டாக்க கூடியவர்கள். இவர்கள் தான் இந்த சமூகத்தின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், இன ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் ஆபத்தான எதிர் மனித துருப்புச்சீட்டுகள்.
தற்காலத்தில் ஊடகங்கள் இக்குறித்த கைங்கரியங்களை சிறப்புற செய்வதாக அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமூகவலைத்தளங்கள் அவர்களின் எல்லை கடந்த தாக்குதலையும், குற்றச்சாட்டுகளையும், வன்முறை மீறிய துஸ்பிரயோகங்களையும் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து கையகப்படுத்தும் துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயமன்று. மாறாக இது ஒரு வன்முறையான அத்துமீறலாக தாக்குதலாக நோக்கப்பட வேண்டியது. ஏனெனில் பல்லின சமூகமாக வாழக்கூடிய இலங்கையில் கடந்த ஏப்ரல் தற்கொலை தாக்குதல் ஒட்டுமொத்த இலங்கை சோனாக சமூகத்தின் இந்நாள் வரையான செயற்பாடுகளையும், எண்ணங்களையும் சிதைத்து ஒரு அடிப்படைவாத சிந்தனாவை பல்லின சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு விதைத்துவிட்டதை அவதானிக்க முடிந்தது. அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றம்
இழைக்கப்பட்ட குற்றவாளிகளாக குற்றஉணர்வை தானாகவே தூண்டிக்கொண்டோம்.
இந்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விளைவிக்கப்படுகின்றன அநீதிகளும், மனித உரிமை மீறல்களும் துறை சார்ந்த நிபுணர்கள் அல்லது துறைசார் தரப்புகள் கையாளவேண்டிய பிரச்சினைகளை பொது வெளியில் விவாதிக்கும் ஓட்டை சமூகமாக மாறிவிட நாம் இடம் கொடுத்துவிட்டோம். இவ்வாறு தொழிற்படுவது ஆபத்தான குறிகாட்டியாகும். சமய நல்லிணக்கம், மத சுதந்திரம் மற்றும் கலாசார சகவாழ்வு பற்றி அதிகம் பேசும், செயற்படும் சமூகமாக எம்மை நாம் அடையாளப்படுத்திக்கொண்டு இருந்த போதும் இம்மில் காணப்படும் உஷார் மடையர்கள், அடிப்படைவாதிகள், வேலையற்ற வெட்டிப் புண்ணாக்குகள் தங்களை மத காவலர்களாக காட்டிக்கொள்ள எடுக்கும் பிரயத்தனம் ஒரு சமூகத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி பிளவுபடுத்த கூடிய ஒரு நிர்ப்பந்த சூழல் சமூக மட்டத்தில் எழுப்பப்படுகின்றது. இதற்குப்பினால் தேசிய அரசியலும் உண்டென்றும் நாம் உணர்வேண்டும்.
இந்த நிலை தொடருமானால் எதிர்கால தலைமுறைக்கு நாம் பிழையான ஒரு தொடக்கத்தை விட்டுச் செல்வதாகவே கருத முடியும். பிரச்சனைகள் எழும் போது அதற்கான இரு தரப்பு நியாயங்களை ஆராய்ந்து அதனை முடிவு செய்வதற்கான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட தரப்பாருடன் அதனை கையளித்துவிட்டு விலக்கிக்கொள்வது ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைத்திருப்பிற்கும் சமூகவியல் ஒருமைப்பாட்டிற்கும் வழி கோரலாம்...
No comments:
Post a Comment