இந்த போராட்டம் வெறுமனே பாமர பொதுமக்கள் புரட்சியாக மாத்திரம் சாதாரணமா எடைபோட்டுவிட முடியாது. இதற்கு பின்னால் பெரும் சர்வதேச சக்திகளின் புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் நாட்டை நேசிக்கும் துறைசார் வல்லுனர்களின் கைகோர்ப்பு பிணைக்கப்பட்டு இருப்பதனை மறைமுகமாக அவதானிக்க முடிகின்றது. திட்டமிட்டு எந்தவொரு வழுக்களும் இல்லாமல் அடியெடுத்து முன்னோக்கி நகரத்தப்படும் ஒவ்வொரு படிகளுக்குப் பின்னும் கூம்பக திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளிப்படையாக எம்மால் உணர முடியாவிட்டாலும் இதுவே இன்றைய எதார்த்தம்.
பெரும்பான்மை சமூகம் முன்னெடுக்கும் ஆத்மார்த்த போராட்டத்தின் நோக்கமும், இலக்கும் அதற்கான பாதையும் தெளிவாக வரையப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மையினரின் சில்லறைத் தனமான எதிர்ப்புகள் அரசுக்கு எதிரான உண்மையான எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக அமையவில்லை என்பதே இங்கே நாம் பரிசீலனை செய்யவேண்டிய விடயதானம்.
ராஜபக்ஷகளுக்கு எதிரான போராட்டமாக ஆரம்பத்தில் தொடர்ந்த இவ்வெதிர்பு நடவடிக்கை இன்று அதன் மற்றுமொரு பரிணாம நிலையை அடைந்து ஊழலுக்கும், சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக உருமாற்றம் பெற்றுள்ளது. இது தொடர்ந்தும் அரசியலில் மட்டுமல்லாது அரச இயந்திரத்திலும், அதன் இயங்கியல் பாங்கிலும் வியாபிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முற்போக்கு போராட்டம் தொடரும் அடுத்த ஆட்சியில் கேள்விகேற்கும், போராடும் புதிய தலைமுறைக்கு வித்திடும்....
எதிர்வரப்போகும் நாட்களில் பொதுமக்கள் பல தியாகங்களையும், தங்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கான மூலாதாரங்களையும் துறக்க நேரிடலாம். இது புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கான சுபீட்சமான மறுமலர்சிக்கான அடித்தளமாக அமையும்.
#Go_Home_Rajapaksas #ArrestRajapakshas
No comments:
Post a Comment