அசையாக்கரடி (Sloths)
சோம்பேறித்தன விலங்கு
ஸ்லாத்கள் என்று ஆகிலத்தில் அழைக்கப்படும் காட்டு விலங்குதான் அந்த மகா சோம்பேறி அசையாக்கரடி இனங்கள். அண்மையில் நான் டிஸ்கவரி சானலில், இவற்றின் வாழ்க்கை முறை பற்றி பார்க்கக்கிடைத்தது. காட்டில் நடமாடும் ஓர் அதிசயம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மரங்களில்வாழும் கரடிபோன்ற தேவாங்கினஞ் சார்ந்த பால்குடி விலங்குவகை இது.
நெடுத்து உயர்ந்து வளர்ந்திருக்கும் காட்டு மரங்கள்தான் இவற்றின் வீடு. உடல் உபாதையைத் தீர்த்துக் கொள்ள வாரத்தில் ஒரு தடவை மரத்திலிருந்து நிலத்தில் இறங்கும். ஜகுவார் என்ற இனப் புலியிடமிருந்தும், பெரிய கழுகுகளிடமிருந்தும் தப்பிக் கொள்ள இவை மரங்களையே தமது வசிப்பிடங்களாக விரும்புகின்றன.
ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு இடையிடையே இவை தாவி தமது “வீட்டை” மாற்றிக் கொள்வது எந்த மிருகத்திடமும் இல்லாத ஒரு பழக்கம். இதன் கைகளின் நீண்ட வளைந்த நகங்கள், இதற்கு பேருதவி செய்கின்றன. இது சாப்பிடும் ஓர் இலை ஜீரணிக்க 30 நாட்கள தேவைப்படுகின்றன என்பது நம்மை அதிர வைக்கும் தகவல். உடம்பிற்கு இது பெரிதாக வேலை எதுவும் கொடுகாதது ஒரு காரணம். ஒரு நாளில் சராசரியாக இது சுமாராக 37 மீட்டர் துாரமே பயணிக்கின்றது. (ஒரு காற்பந்தாட்ட மைதானததில் பாதியளவு துாரம்)
இது மலம் கழிக்கும்போது, ஒரே தடவையில் இதன் உடல் எடையின் மூன்றிலொரு பகுதி, மலமாக வெளியேறி விடுகின்றது. வாரத்தில் ஒரு தடவையே இது மலங் கழிக்கின்றது. மரத்திலிருந்து இறங்கி வந்து மரத்தடியில் ஒரு குழி தோண்டி, மலத்தை இங்குதான் கழிக்கும் என்பது இதன் சிறப்பு. வயிறு நிறைந்திருந்தாலும், பட்டினியால் இறக்கக் கூடிய மிருகம் இந்த தேவாங்குக் கரடிதான்!
தன் நேரத்தை அதிகமாக மரங்களில் கழிக்கும் இந்த விலங்கு, 30 மீற்றர் உயரமான மரத்திலிருந்து தொப்பென்று கீழே விழுந்தாலும், உடலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஜாக்கிரதை... மனிதர்களை விட மூன்று மடங்கு பலம் வாய்ந்த இந்த விலங்கு தரையை விட நீாில் நகரும் வேகம் அதிகம். தலைகீழாக மரக்கிளையில் தொங்கியபடி இதனால் உறங்க முடியும். அதுபோல இறந்த பின்பும் தலைகீழாக கிளைகளைில் தொங்கிக் கொண்டிருப்பது இவற்றின் இயல்பு. அவகாடோ பழங்களை விரும்பி உண்ணும் இவை, இதன் விதைகளை எங்கும் பரப்பி, இந்தப் பழங்கள் அதிகமாக காய்ப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் மிகப் பெரிய அளவிலான இந்த மிருகங்கள் தரையில் வாழ்ந்திருக்கின்றன. ஆறு மீற்றர் உயரமான இராட்சத இனங்கள் முழுதாக இந்தப் பழங்களைச் சாப்பிட்டு விதைகளைப் பரப்பியிருக்கின்றன.
நிறக்குருடு இவற்றிற்குண்டு. மங்கிய வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்க முடியாது. பகலிலோ கடும் சூரிய ஒளியில், கண்கள் பார்வை இழந்து விடுகின்றன. ஆனால் மோப்பம் பிடிக்கும் திறன் நன்றாக உள்ளது. இதனைச் சோம்பேறி என்பதன் காரணம், இந்தக் கண் பார்வைக் கோளாறுதான்! இவற்றின் நடமாட்டத்தை இது வெகுவாய் குறைத்து விட்டது.
No comments:
Post a Comment