காலச்சக்கரமே இப்பிரபஞ்சத்தின் அச்சாணி. அதுவே இவ்வுலகை இயக்கும் மூல சக்தியையும், சந்தர்ப்பத்தையும் அளிக்கின்றது. ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றால்போல் அதன் வெளிப்பாடுகளை அந்த மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி கட்டங்களில் வெளிப்படுத்துகின்றது. இதுவே உலக தொடக்கம் முதல் இன்றுவரை மட்டுமன்றி உலக அழிவுவரை தொடரும். இது ஒரு சாராமாறிக் காரணியாகும். எல்லா விடயங்களும் அது நிகழ்வதற்கான நேரம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
சமூகத்தில் உண்டாகும் ஒவ்வொரு மாறுதல்களும் அது சடுதியாக நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் ஒவ்வொரு நிகழ்விற்கு பின்னும் ஒரு கால வளர்ச்சியும், முதிர்ச்சியும் உண்டு. அது வெளிப்படும் நேரமே அதன் இறுதிநிலை எல்லையாக கணிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் நேர இடைவெளி வேறுபடுகின்றது. மேலும் சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தனிமனித அலகுகளையும் அது விஸ்தீரணம் அடைய சொற்ப இடைவெளி தேவைப்படுகின்றது.
அறிவு, அறிவியல், ஆன்மீகம், அரசியல், கலை, கலாசாரம், பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் இலக்கியம் என்று பல்துறையை இந்த எல்லைப்படுத்தலில் உள்வாங்கிட முபையுமாகும். சமூக வாழ்வியலில் ஒவ்வொரு மனிதனும் தனக்கேயான ஒரு வழிமுறையையையும் நடைமுறையையும் கையாளுகின்றான். இது அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அப்பால் அவன் எந்த சூழலை சார்ந்துள்ளானோ அதுவும் அவனது தீர்மானத்தில் தாக்கம் செலுத்தும் காரணியாக உள்ளதை தற்காலத்தில் அவதானிக்க முடிகின்றது.
எனவே எல்லா நிகழ்வுகளும் நடந்தேற கால அவகாசம் தேவை என்பதை புரிந்து அவற்றுக்காக சற்று காத்திருப்பதில் தவேறுத்துமில்லை.
No comments:
Post a Comment