Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 27, 2022

டெஸ்லா ரோபோ

#டெஸ்லா_ரோபோ

அறிமுகம் செய்கிறது டெஸ்லா நிறுவனம் 


டெஸ்லா நிறுவனம் 2008ம் ஆண்டு Elon Musk என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக தானியங்கி கார் தயாரிப்பில் வெகு பிரபலமாகி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாகவே திகழ்கிறது. தானியங்கி, எலக்ட்ரிக் என இரண்டையும் ஒருசேர தயாரிக்கும் டெஸ்லா, எதிர்காலத்தை நோக்கியே பயணித்து வருகிறது. 


#Humanoid_Robot டெஸ்லா எந்திரன்

இந்நிலையில் தன்னுடைய அடுத்த திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார் எலன் மஸ்க். அது வேறு ஒன்றுமில்லை, மனித வடிவிலான ரோபோதான். டெஸ்லா போட் என்று அழைக்கப்படும் ரோபோவின் கான்செப்டை #Tesla_AI_Day விழாவில் அறிமுகப்படுத்தி பேசினார் டெஸ்லாவின் நிறுவனர் மஸ்க்.


Tesla Bot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதவடிவ ரோபோக்கள், அந்நிறுவனத்தின் தானியங்கி கார்களில் உள்ள சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மனிதர்களைப் போல நடமாடும் இந்த ரோபோக்கள், டெஸ்லா கார்களில் உள்ள கேமரா, சென்சார்கள், நியூரல் நெட்வேர்க் பயன்படுத்தும்.  


5 அடி 8 அங்குலம் உயரம், 57kg எடை கொண்டதாகவும் இந்த ரோபோ இருக்கும். மணிக்கு 8km வேகத்தில் நடக்கவும், சுமார் 21kg எடையை சுமக்கும் திறனையும் இந்த ரோபோ கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Humanoid ரோபோவாக இது இருக்குமென டெஸ்லா போட் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த ரோபோ மனிதர்களின் வழக்கமான பணிகளுக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்தார். மனித ரோபோ என்றதும் எந்திரன் படத்தில் வருவது போல கண், மூக்கு, வாய் எல்லாம் இதற்கு இருக்காது. முகத்தில் முழுவதும் செல்போன் டிஸ்பிளே போல தொடுதிரை டிஸ்பிளேவும் கேமராவும் தான் கொடுக்கப்பட்டிருக்கும். மனிதர்களுடன் தொடர்பில் இருக்க இந்த டிஸ்பிளேவும், கேமராவுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.


தற்போது கான்செப்ட் வடிவில் தான் இந்த ரோபோ தயாரிப்பு உள்ளது. கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற மனிதர்களுக்கு சலிப்பு தரக்கூடிய வேலைகளை இந்த ரோபோ செய்யும். மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற பணிகள், திரும்பத் திரும்ப வகையில் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்படுவதாக செய்ய வேண்டியுள்ள பணிகளை செய்வதற்கு ஏற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதும், அதற்கு ஹுயூமனாய்ட் ரோபோக்கள் பெரும் அளவில் கைகொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்புகிறார் மஸ்க். ஆட்டோமேட்டிக் கார் தயாரிப்பில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் டெஸ்லா, ஹுயூமனாய்ட் ரோபோ தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தும் என்றே தெரிகிறது. ஒரே இரவில் நடக்க முடியாத விஷயம் என்றாலும், இதுதான் எதிர்காலம் என தன்னுடைய முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.


இந்த உலகம் மனிதர்களால் மனிதர்களுக்காகவே உருவாக்கப்படுகிறது என்ற டேக் லைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டெஸ்லா போட், மனிதர்களின் இடத்தை நிரப்பிவிடக் கூடாது என்பதே சிலரின் கருத்தாகவும் இருக்கிறது. மனிதர்களுக்காக ரோபோ என்ற பயன்பாடு வருவது வரவேற்க வேண்டியது என்றாலும், மனித உழைப்பையும், மனிதர்களின் வேலையையும் ரோபோக்களே கையகப்படுத்தும் நிலை வந்தால் அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages