கோட்பாடுகளைக் கொண்டு நிறுவுவதில் தான் பெரும்பாலும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். நடைமுறை ரீதியாக பெரும்பாலும் நாங்கள் முயற்சிப்பது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா நிகழ்வுகளையும் எழுத்து மூலமான அல்லது விதிமுறைகள் மூலமான கொள்கைகளுக்கு அமைவாக முன்னெடுப்பது என்பது மனிதவாழ்வில் சாத்தியமற்ற ஒரு செயல்முறையாகும். இந்தச் செய்முறை காரணமாகவே பல்வேறு திட்டங்களும், செயற்பாடுகளும் மற்றும் சிந்தனைகளும் நடைமுறை ரீதியில் மக்களை சென்றடைவது பாரிய தடங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றதை பார்க்கமுடிக்கின்றது.
கோட்பாடுகள் ரீதியான விடயங்களுக்கும் நடைமுறை ரீதியான விடயங்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளன. ஏனெனில் கோட்பாடுகள் தர்க்க ரீதியான முடிவுகளை கொண்டு உண்டாக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற தீர்வாகும். இவை ஆவணங்களில் பதிவுசெய்து பாதிக்கப்படுவதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் ஒரு விடயதானத்தை முன்னெடுக்கின்றபோதில்; அவற்றினால் ஏற்படுகின்ற முன்-பின் பிரதிபலிப்புகள் மற்றும் விளைவுகள் என்பன நடைமுறை ரீதியில் பயணிக்கும் ஒருவனாலேயே கிரகித்துக்கொள்ள முடிகின்றது.
இதனால்தான் அரசியல் என்பது கோட்பாடு ரீதியான சிந்தனைகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டாலும் அவை செயற்படுத்தும் விதம் கேள்விக்குறியாகவே நிலவுகின்றது. அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தும் நாங்கள் அடிமட்ட மக்கள் மீது சுமத்தாமல் நம்மை நாம் அவர்களுக்கு உள்ளே ஒளித்துக் கொள்ள விரும்புகின்றோம். வெறுமையிலிருந்து உருவாக்கப்படுகின்ற அரசியல் தலைவர்கள் அவர்களின் சிந்தனை செயற்பாடுகள் எம்மைப்போன்று தான் இருக்கும். ஏனெனில் நாங்களும் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தானே...
No comments:
Post a Comment