மானிட_கைரேகைகள்
மனிதனை தவிர கோலா கரடி, கொரில்லா, சிம்பன்ஸி இவை மூன்றுக்கும் மட்டும் தான் ரேகைகள் உள்ளன.
விஞ்ஞானிகள் கைரேகைகளின் நோக்கம் பொருள்களைப் பிடிக்கும் திறனை மேம்படுத்துவதாக நம்புகிறார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் நம் விரல்களுக்கும் ஒரு பொருளுக்கும் இடையில் உள்ள உராய்வை அதிகரிப்பதன் மூலம் கைரேகைகளின் பிடி மேம்படுவதில்லை என்று சொல்கின்றனர்.
ஒரு மனிதன் இறந்த பிறகு கடைசியாக அழிவது அவனது தலை முடியும் மற்றும் ரேகைகளுமே. உங்கள் கைகள் வெட்டுபட்டால் அல்லது தோல் அருபட்டால், உங்கள் ரேகைகளின் பயணம் தடைபடாது. மேலும் காயம் ஆறிய பிறகு வெட்டுப்பட்ட இடத்திலும் ரேகை வளரும். அதற்கு பிறகு உங்கள் கை ரேகை VIP ரேகையாக மாறிவிடும். மற்ற கை ரேகைகளை சரி பார்க்க இரண்டு மணி நேரம் ஆகும், உங்களுடைய கை ரேகைகளை சரி பார்க்க இரண்டு நிமிஷம் போதும்.
அந்த வெட்டுப்பட்ட ஆரம்ப புள்ளி அல்லது முடிவின் புள்ளியை மைனுஷை (Minutiae) என்பார்கள். ரேகையை ஒப்பிடும் ஒப்டிகால் சென்சர் Machine முதலில் இந்த மைனுஷையை தான் தேடும்.
பிரிட்டிஷ் மானுடவியலாளரும் சார்லஸ் டார்வின் உறவினருமான சேர். பிரான்சிஸ் கால்டன் 1880 களில் கைரேகைகளை அடையாளம் காணும் வழிமுறையை கண்டுபிடித்தார். ஆதிகால பாபிலோனியர்கள் தங்களது வியாபார நேர்மையை நிரூபிக்க களிமண்ணில் தங்களது ரேகையை பதியும் பழக்கத்தை பின் பற்றினர் (இன்றைய அக்ரீமென்ட் போல). இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டு வரை குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான ஒரு முறையாக கை ரேகைகள் பயன்படுத்தப்படவில்லை.
பொதுவாக நம் ரேகைகளில் பார்க்கும் கோடுகளை (Ridges) என்று சொல்லுவார்கள், அதை Loop, Whorl, Arch என்று மூன்று விதமாக பிரிகிறார்கள். தோரயமாக ஒருவர்க்கு கட்டை விரலில் 150 ரிட்ஜஸ் வரை இருக்கும்.
இந்த மூன்றில் இருந்து நிறைய கிளைகள் பிரிகிறது.
- Plain Arch & Tented Arch
- Radial Loop & Ulnar Loop
- Plain whorl & Central pocket whorl
- Double loop whorl & Accidental whorl
இதில் #Accidental_whorl என்ற Arch வகை தான் மிக மிக அரிது. உலகில் மொத்தமாக 5% மக்கள்தான் இந்த வகை ரேகை கொண்டுள்ளார்கள்.
ஒரு நபர் வளரும்போது கைரேகைகள் பெரிதாக வளரும் (குழந்தை பருவத்திலிருந்தே முதிர்வயது வரை). ஆனால் அடிப்படை வடிவம் காலப்போக்கில் மாறாது. மேற்கூறிய படி ஒரு நபர் வயதாகும்போது கைரேகையின் அளவு அதிகரிக்கிறது, ஆனால் வடிவங்கள் அப்படியே இருக்கும்.
"நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்"(அல்குர்ஆன் 75:4)
No comments:
Post a Comment