Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 17, 2022

போதைக் கலாசாரம்


​ஒரு சவால்மிக்க சூழலை நாம் இன்று எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றோம். எவ்வாறு பண்டைய அரசர்கள் தங்களுக்கு எதிரி இராஜ்யங்களை அழிப்பதற்காக மதுவையும்ஸ் மாதுவையும் பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார்களோ அவ்வாறே இன்றுள்ள இளைஞர் சமூகமும் அழிவை நோக்கி பயணிப்பதை காண முடிகின்றது. ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறையினரை குறுகிய வட்ட சிந்தனைக்குள் மட்டுப்படுத்துவது ஒருவகை முதலாளித்துவத்தின் பிரதான அடக்குமுறை வழிபாடாகும். 


இதனூடாக தாங்கள் எதிர்பார்க்கும் வளைவுகளையும் வியாபார தந்திரோபாயங்களையும் சமூகத்தின் மீது திணித்த செல்வாக்கினூடாக தங்களின் அதிகாரங்களையும் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள இது பிரதான உபாயமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறு மேலைத்தேய நாடுகள் வளம் பொருந்திய ஆப்பிரிக்க கண்டத்தை ஒரு வகை வளர்ச்சியடையாத பிற்போக்கு சமூகமாக மட்டுப்படுத்தி வைத்திருக்கிறதோ அதே நிலையை எதிர் காலங்களில் எமது சமூகமும் சந்திக்க நேரிடப்போகின்றது என்று உணர முடிகின்றது. சமூக மட்டத்தில் போதைப்பொருளுக்குகான கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் பாரியதொரு வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பிரதான தளமாக பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் விளையாட்டு மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. 


நல்ல குடும்ப சூழல் பின்னணி, உயர் கல்வியல் பின்புலத்திலிருந்து  உருவாகின்ற இளைஞர்கள் யுவதிகள் இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது  ஆச்சரியமாகவுள்ளது.  அதுமட்டுமின்றி சமூகத்தின் அந்தஸ்தில் இருக்கின்ற மேட்டுக்குடி வர்கத்தினராலேயே இந்த வியாபாரம் உள்ளூரில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான மாபியாக்கள் சமூகத்தை அழிக்கும் கைங்கரியத்தை லாவகமாக கையாள்கிறார்கள். 


புத்தக்கத்திறன், சமூகவியல் இளம் தலைமுறையினர் உபயோகம், சிந்தனை ரீதியிலான புதிய முன்வைப்பு என்பவற்றில் அடுத்த சந்ததியினர் நுகரப்படும் வீதம் மந்தமாகவே உள்ளது. இது ஒரு மானிடவியல் வரட்சி நிலையாகும். தொடர்ந்து இது நிலவுமானால் சமூக ஆளுமை பற்றாக்குறைகளையும், வெற்றிடங்களையும் எம் எதிர்காலம் சந்திக்க நேரிடும். ஆபத்தான குறிகாட்டிகளை இனங்கண்டு இப்போதே அதற்கான மீள் கட்டுமானங்களை சீரமைப்பதில் ஏமது பங்கு என்ன? 


சமூக அமைப்புகள், வெகுஜன ஊடகங்களை, சமூக ஆளுமைகள், சர்வமத தலைவர்கள், படைப்பிரிவினர் மற்றும் போதைத்தடுப்பு பிரிவினர் என்ற பல்நிலை தரப்பார்களை உள்ளாக்கிய பிரதேசவாரியான குழுக்கள் அமைக்கப்பட்டு இவ்வாறான இளைஞர் யுவதிகளை மீட்டெடுக்க முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages