Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 17, 2022

வாகன என்ஜின் குளிர்த்திகள்

வாகன_என்ஜின்_குளிர்த்திகள்

Combustion Engine Cooler 


வாகனத்தின் இயந்திரபாகம் எரிபொருளை எரித்து கிடைக்கும் சக்தியை இயந்திரசக்தியாக வாகனத்திற்கு அளிப்பது, இயந்திரத்தின் கலத்தின் (Cylinder) உள்ளேதான் எரிபொருள் எரிக்கப்படுகிறது. 

எனவே 

👉 கலமும், கலத்தை சுற்றியுள்ள பாகமும் நன்கு சூடேறும். 

👉 அடுத்து கலத்தினுள் இயங்கும் Piston முதல் மற்றுபல இயங்குபாகங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபடி வேகமாக இயங்குபவை. அவை ஏற்படுத்தும் உராய்வும் வெப்பத்தை உருவாக்கும்.


இப்படி இயந்திரபாகங்கள் அதிகம் சூடேறினால் அதில் சிலவிடங்களில் பயன்படுத்தும் Rubber Seal போன்றவை உருகவும், உலோகபாகங்கள் விரிவடைந்து உராய்வில் சிக்கிக்கொண்டு கேடாகவும் செய்யவும். அதைத்தவிர்க்க இயந்திர பாகங்களின் வெப்பத்தை குறைத்து சூடாகமல் காக்கவேண்டும். உராய்வையும் குறைக்க வேண்டும். உராய்வை குறைக்க, உராய்ந்து கொண்டு இயங்குகின்ற பாகங்களில் உயவு எண்ணையை (Lub Oil) தொடர்ந்து அனுப்பி, அது தொடர்ந்து படும்படி, உபயோகிப்பார்கள். உயவு எண்ணை உராய்வை குறைப்பதுடன், இய்ந்திரபாகத்தின் வெப்பத்தையும் தனக்குள் வாங்கி அதன் வெப்பத்தையும் குறைக்கும்.


இப்பொழுது தொடர்ந்து வெப்பத்தை தான் ஏற்று சூடாகும் அந்த உயவு எண்ணையின் வெப்பத்தையும் குறைக்கவேண்டும். இல்லையென்றால் அதன் உயவுத்தன்மை குறைந்துபோகும். அதன் ஆவியாகும் வெப்பநிலைக்குமேல் அதிகமானால் கட்டிப்பட்டு சிக்கிக்கொள்ளும் மேலும் ஆவியான எண்ணை தீப்பிடிக்கவும் வாய்ப்பாகும். உயவு எண்ணை இயந்திரத்தின் உட்புறத்தில் வெப்பத்தை குறைத்தாலும் இயந்திரபாகங்களின் உலோகங்கள் கடத்துகின்ற வெப்பம் இயந்திரத்தின் வெளிப்புறம் உள்ள காற்றால்தான் குறைய வேண்டும். வேகமாக சூடேறும் இயந்திரத்தினை வேகமாக குளிர்வித்தாலே இயந்திரம் அதிகம் சூடாவதை தடுக்கமுடியும். அப்படி குர்விபதற்கான வழிகள் வெவ்வேறு.


சாதாரணமாக சிறிய இயந்திரங்கள் காற்றால் குளிவிர்ப்பதற்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்ட அமைப்பிலான இயந்திரம் (Air Cooled Engines), ஆனால் சக்திவாய்ந்த திறன்கூடிய இயந்திரங்களில் வெப்பம் கூடுதலாய் வெளியாகும், எனவே அது போதாதென்பதால் ஏற்படுத்தப்பட்டதே திரவ குளிர்விப்பு முறை இயந்திரம் (Liquid Cooled Engins). இதில் நேரடியாக காற்றால் குளிர்விப்பதற்கு பதில் விரைவு வெப்பக்கடத்தியான நீரை (பெரும்பாலும்) உபயோகித்து இயந்திரத்தை குளிர்விப்பார்கள் என்றாலும் நீரினால் துருப்பிடிப்பதை தடுக்கவும், குளிர்விக்கும் திறனை அதிகரிக்கவும் வேண்டி சில வேதிப்பொருளை (Coolent) கலந்தே உபயோகிப்பார்கள். அந்த திரவ குளிர்விப்பானை காற்றால் குளிர்விக்கவேண்டி Radiator இருக்கும். இதில் பல சிறியகுழாய்களின் வழியே திரவம் செல்ல அதனைச்சுற்றி அமைந்துள்ள வலை (Grill) போன்ற அமைப்பில் விசிறியின் உதவியுடன் வேகமாக அதிக காற்றை செலுத்துவார்கள்.


சில இயந்திரத்தின் வெளிப்புறத்தை குளிர்விப்பதோடு, அதன் உள்ளிருக்கும் இயங்கு பாகங்களின் உராய்வை தவிற்கவும் குளிர்விக்கவும் வேண்டி உபயோகிக்கும் உயவு எண்ணையையும் (Lubricant) குளிர்விக்க, வெப்ப மாற்றியை (Heat Exchangers) உபயோகிப்பதுண்டு இது Radiator போலவே செயல்படும். இதிலும் Radiator போன்ற அமைப்பில் உயவுஎன்னையை செலுத்தி காற்றால் குளிர்விப்பதும் (Air cooled) உன்டு அல்லது ஒரு தொட்டிபோன்ற அமைப்பில் செலுத்தி திரவத்தால் குளிர்விப்பதும் (Liquid cooled) உன்டு.


இருசக்கர வாகன குளிர்த்திகள்

👉 காற்று குளிர்விப்பு இயந்திரம் 

(Air cooled Engines)

ஆரம்பத்தில் இருசக்கர வாகணங்களில் இரண்டடி (Two stroke) ஒற்றைக்கலன் (Single Cylindet) வகையிலான குறைந்த திறன் இயந்திரங்களே உபயோகித்தில் இருந்தபோது, இயந்திரத்தின் வெளிபாகத்தை குறிப்பாக கலம் (Cylinder) அமைந்திருக்கும் பகுதியின் வெளிப்புறத்தில், அதிக காற்று கிடைப்பதற்கு வசதியாக துடுப்பு (Fins) போன்ற அமைப்புகள் உடையதாய் வடிவமைத்திருப்பார்கள் அதனால் இயந்திரத்தின் வெளிப்புறம் காற்றைத் தொடும் பரப்பளவு கூடுவதால் அதிகம் வெப்பத்தை வெளியே கடத்தி குளிரடையும். இதன் உயவு எண்ணை இயந்திரத்தின் கீழே உள்ள சேமிப்புத்தொட்டியில் சற்று அதிகமாக அங்குள்ள எண்ணையோடு கலந்து தொட்டியின் வெளிப்புறமுள்ள காற்றால் குளிர்வடையும். இது சாதாரன காற்று குளிர்விக்கும் இயந்திரம் (Air cooled).


👉 எண்ணை குளிர்விப்பான் இயந்திரம் 

(Oil cooled Engine)

பின்னர் இரட்டை கலன் (Two Cylinder) மற்றும் நாண்கடி (Four stroke) வகை என சிறிது திறன்கூடிய இயந்திரங்கள் வந்தபோது வெளியிடும் வெப்பத்தின் அளவும் கூடியது. ஒரு கட்டத்தில் அதற்கேற்ப அதன் வெளிப்புறத்தில் காற்றுபடும் பரப்பை (Air contact area) அதிகரிப்பதும் கடினமாகவே, காற்று குளிர்விபான் முறையிலேயே ஓரளவு குளிர்வித்ததோடு, கூடுதலாக இயந்திரத்தின் உள்பாகத்தால் சூடான உயவு என்னையையும் குளிரூட்டும்படியான, உயவு எண்ணையையும் குளிர்விக்கும் முறை உபயோகத்தில் வந்தது. இதில் வண்டியின் முன்புறத்தில் Radiator போலிருக்கும் காற்றால் குளிர்விக்கும் வெப்பமாற்றியை (Heat exhanger) கூடுதலாக பொருத்தி, உயவு எண்ணையை அதில் செலுத்தி அதையும் குளிர்வித்தார்கள். உயவு எண்ணையையும் குளிர்விக்கும் இவ்வகையை எண்ணை குளிர்விப்பான் (Oil cooled) என்றழைத்தனர்


👉 திரவ குளிர்விப்பு இயந்திரம் 

(Liquid cooled Engines)

தற்போது அதிக சக்திவாய்ந்த இயந்திரங்களையும் உபயோகிப்பதால் அவற்றில் காற்று குளிரூட்டிக்கு பதிலாக குளிரூட்டும் திறன் மிகுந்த, திரவ குளிரூட்டியை உபயோகிக்கிறார்கள். இதில் இயந்திரத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் துடுப்பு (Fin) போன்ற அமைப்பை எடுத்துவிட்டு, அதற்குபதில் இயந்திரத்தின் வெளிபாக உலோகப்பகுதியை கனம் (Thicknes) கூட்டி இருபக்க சுவர்கள் நடுவே நீண்டவரியாக துளையமைத்து (அல்லது) கலத்திற்கும் (cylinder) வெளிப்புறச் சுவருக்குமிடையே வெற்று இடமிருக்கும்படி செய்து, அதன் வழியே திரவத்தை (Coolent) அனுப்பி இயந்திர வெளிப்புறச் சவரினுள்ளே திரவம் கலத்தைச் சுற்றிவரும்படி செய்திருப்பார்கள். இயந்திரத்தின் வெப்பத்தால் சூடான அந்த திரவத்தை முன்புறம் Radiator ஐ பொருத்தி அதற்குள் அனுப்பி அங்கே குளிர்விப்பார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages