சிறுநீரக_கற்கள்_உருவாவது_எவ்வாறு
அந்தக் கல்லின் இரசாயனவியல் பெயர் கல்ஷியம் ஒக்சலேற் (Calcium Oxalate)
கார்பனின் ஒக்சிஜனேற்றப்பட்ட எதிரேற்ற அயன்களில் பிரதானமானது கார்பனேற் அயன் தான் என்றாலும் கார்பனின் மற்றுமொரு விசித்திரமான அயனும் உண்டு. அதன் பெயர் ஒக்சலேற்.
உடலில் ஓடும் இரத்தத்தில் இந்த கால்ஷியம் மற்றும் ஒட்சலேற் அயன்கள் கொஞ்சம் அதிகமானால், கிட்னியால் இரத்தம் வடிகட்டப்பட்டு சிறுநீர் ஆக மாறிய பின்னர் அந்த சிறுநீரில் இந்த #கல்ஷியம்_ஒக்சலேற் குட்டிக்குட்டி கற்களாக இருக்கும்.
சிறுகற்கள் சிறுநீர் வெளியேறுகையில் போய்விட்டால் சிக்கல் இல்லை. ஆனால் சிறுநீர்க்குழாய்களையோ கிட்னியில் உள்ள வால்வுகளையோ அடைக்கும் அளவுக்கு பெரிதா இருந்தால், பொறுக்க முடியாத வலி ஏற்படலாம்.
கல் ஆக உருவாகுகின்றது என்றாலே அது நீரில் கரையக்கூடியது இல்லை என்று புரிந்திருக்கும். இந்த கால்ஷியம் மற்றும் ஒக்சலேற் அயன்கள் ஏன் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாகின்றது என்றால் மூன்று பிரதான காரணங்களை குறிப்பிடலாம்.
ஒக்சலேற் அயன்கள் அதிகமாக உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வோருக்கு. உணவாக எடுத்துக்கொள்ளப்படும் கல்ஷியம் ஆல் சிக்கல் இல்லை ஏனென்றால் உடலில் கல்ஷியம் கூடினாலோ குறைந்தாலோ அதனை எலும்புகளிலிருந்து எடுத்து இரத்தத்தில் சேர்ப்பதற்கும் இரத்தத்திலிருந்து கல்ஷியத்தை மீண்டும் எடுத்து எலும்புகளில் சேர்ப்பதற்கும் எம் உடலில் ஹார்மோன்கள் உள்ளன.
ஆனால் கல்ஷியம் அயன்களால் சிக்கல் எங்கே வரும் என்றால், நாம் அதிக சோடியம் மற்றும் பொட்டாஷியம் போன்ற உப்புக்களை கொண்ட உணவுகளையோ அல்லது அதிக புரதம் நிறைந்த உணவுகளையோ எடுத்துக்கொள்ளும் போது, அந்த அயன்களை சமாளிப்பதற்காகவும் புரதத்தில் உள்ள அமைன் கூட்டத்தை (Amine Group) யூரிக்கமிலமாக (Uric acid) வெளியேற்றுவதற்காகவும் கிட்னி பார்க்கும் வேலைகளில் ஒன்று தான் அயனி பரிமாற்ற (Ion transport) முறை. இந்த அயன் பரிமாற்றம் கிட்னியில் நிகழ வேண்டும் என்றால் கால்சியம் அயன்களின் பிரசன்னம் அதாவது எக்ஸிஸ்டன்ட் இரத்தத்தில் இருக்க வேண்டும்.
எனவே, கிட்னியிலிருந்து மூளைக்கு செய்தி அறிவிக்கப்பட்டு மூளையில் உள்ள பராதைரொயிட் ஓமோனின் வழிகாட்டலில் கிட்னியால் கல்சிட்ரோல் என்ற ஓமோன் சுரக்கப்படுவதனால் கல்ஷியம் அயன்கள் களமிறங்குகின்றன. இந்த வேளையில் ஒக்சலேற் அயன்களும் இரத்தத்தில் இருந்தால், வடிகட்டப்பட்ட சிறுநீரில் நிச்சயமாக கல்ஷியம் ஒக்சலேற் வீழ்படிவுகள் (Precipitatipn) உருவாகும். இதுதான் சிறுநீரகக் கல்..!
இப்படி கல்ஷியத்தாலும் ஒக்சலேற் ஆலும் கற்கள் உருவாவதை பார்த்துவிட்டோம் என்றாலும் ஏற்கெனவே மேலே குறிப்பிட்ட காரணிகளில் மூன்றாவது காரணி ஒன்றும் உண்டு. அதாவது "அதிக நீர் அருந்தாமல் இருப்பது". இதனாலும் அந்த கால்சியம் ஒக்சலேற் படிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக்கப்படுகின்றன. அத்தோடு குட்டிக்குட்டி துணிக்கைகளாக உருவாகும் இந்த வீழ்படிவு, பென்னாம்பெரிய கல் ஒன்றாக மாறக்கூடியதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது ஏனென்றால் அதிக நீர் அருந்தி கிட்னி எப்போதும் ஆக்டிவ் ஆக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்றால் இந்த கால்சியம் ஒக்சலேற்று வீழ்படிவாக முன்னரேயே சிறுநீரால் உடலிலிருந்து வெளியேறிவிடும்.
சிறுநீரக கற்களை எப்படி ஒப்ரேஷன் செய்யாமல் கரைக்கலாம் ?
ஆரம்பகட்ட சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கோ அல்லது அந்த கல்சியம் ஒக்சலேற் படிவாகாமல் தடுப்பதற்கோ சிட்ரஸ் பழங்களை அதாவது தோடம்பழம், எலுமிச்சைப்பழம் இவற்றின் ஜூஸ்கள் உதவுகின்றன ஏனென்றால் அந்த சிட்ரஸ் பழச்சாற்றில் இருக்கும் சிட்ரிக் அசிட் எப்படியும் ஒக்சலேற் வீழ்படிவைகளை கரைத்து விடுகின்றது. வாழைத்தண்டு சாறு மற்றும் வாழைப்பூ சுண்டல் எல்லாம் கிட்னி கற்களுக்கு சிறந்த மருந்தாக அமைகின்றன என்று சில உள்ளூர் மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வாழைமரத்தின் சாறு அதாவது ஜூஸ் இல் என்ன சமாச்சாரம் இருப்பதனால் கிட்னி கற்கள் கரைக்கப்படுகின்றன என்று அறிந்தவர்கள் கருத்திடலாம்.
No comments:
Post a Comment