ஒருவனது மறைவின் பின்னர் அவனது சிந்தனையை புதுப்பித்து, ஆரம்பிப்பது, மீள் ஒழுங்கு செய்து செவ்வைப்படுத்துவது என்பதுவே அவன் மறைவுக்கு நாம் அளிக்கும் வெகுமானம் மற்றும் கண்ணியம்.
அநேகமாக சமூக அரங்கினில் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளின் மறைவின் பின்னர் அவர்களின் ஜனனதினம் தவிர்ந்து மற்ற நாட்களில் நினைவூட்டப்படுவது இல்லை என்றே சொல்லலாம். விதிவிலக்காக புனிதர்கள், கடவுள் அந்தஸ்து பெற்ற மானிடர்களை தவிர.
சமகாலத்தில் வாழும் மா மனிதர்கள் ஒவ்வொரு காலப்பகுதியில், ஒவ்வொரு குடித்தொகையிலும், மற்றும் ஒவ்வொரு சூழலிலும் எழுந்து அவர்களின் பணிகளை மக்கள் மையப்படுத்தி விட்டு செல்வதை கண்கூடாக காண்கிறோம். சிலர் சிந்தனா ரீதியிலும் இன்னும் சிலர் இயங்கியல் ரீதியிலும் தங்களின் வெளிப்பாடுகளை பிரசுரம் செய்கின்றார்கள்.
எவ்வாறு இருந்தபோதும் மறைவின் பின்னரே வாழும் பலர் மரணித்தவர்களின் வாழ்கையை எண்ணி அவர்களை புகழாரம் பாடுகின்றார்கள். மேற்படி நிலைமை ஒருவகை பிற்போக்கான சிந்தனையை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
வாழும்போதே மனித வளங்களையும், மனங்களையும் நுகர்ந்துகொள்ள முயற்சிப்போம்.
No comments:
Post a Comment