அறிவுதான் முதன்மையான இவ்விலுலகின் முதலீடாகும். அது எப்போதும் அழிவின்றி பெருக்கமடையும் செல்வங்களில் முதன்மையானது. மனிதன் தன்னகத்தே கொண்டிருக்கும் அனுபவம், ஆற்றல்கள், நினைவுகள் மற்றும் சிந்தனையின் வெளிப்பாடாக அறிவு அவனுள்ளே குடிகொள்கின்றது. மனிதன் பிறந்தது முதல் அவன் தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் பாடங்கள் அவனது அறிவை விருத்தி செய்யக்கூடியதாக அமைந்துவிடுகிறது.
ஒரு மனிதன் தனது சூழலில் தான் வகிக்கும் பாத்திரத்தை நிலைநாட்டுவதற்கு செல்வங்கள் என்ற அடிப்படையில் அறிவுச் செல்வத்தையே முதன்மையாக தேர்ந்தெடுக்குகின்றான். அந்தவகையில் அவன் செய்யும் முதலீடுகளில் அறிவுதான் தொடர்ந்தும் பெருக்கம் அடையும் ஒரு காரணியாகவும் திகழ்கின்றது. எவ்வாறாயினும் அறிவு எவ்வாறு ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரிமாற்றம் அடைகின்றது என்பதனை நாம் ஆராயும்போது; ஆதிமனிதன் தான் கற்றுக்கொண்ட அறிவை தனக்கு பின்னர் நன்கொடையாக பரிசளித்துவிட்டு சென்றான். அது தொடர்ச்சியாக ஒரு பண்டை மாற்றி நிகழ்வுக்கு ஒப்பாக தொடர்ச்சியாக கையளிக்கப்பட்டு இன்றளவும் வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
பன்மைத்துவத்தை பொறுத்துதான் சூழலிலிருந்து முகர்ந்து கொள்ளும் அளவும் தரமும் வேறுபடுகின்றது. இந்நிலையில் ஒரு மனிதன் தான் பெற்றுக்கொள்ளும் அறிவின் மூலத்தின் தொடர்ச்சித் தன்மையைப் பொருத்தும் அவனது அறிவின் விருத்தி தீர்மானம் செய்யப்படுகின்றது. இதனாலேயே ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனிலிருந்து வேறுபட்டவனாக அடையாளம் காட்டுகின்றான்.
ஆரம்பத்தில் அறிவை கொண்டு மனிதன் தன்னையும், தான் சார்ந்த சூழல், சமூகத்தை மேன்மைப்படுத்தவே அதிகம் உபயோகம் செய்தான். ஆனால் பின்முதலாளித்துவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மனிதனின் அறிவு வியாபார ஈட்டத்தை நாடக்கூடியதாக மாறிவிட்டது. இதனால் ஏற்படும் பிரதிபலிப்பை நாம் இன்று உணர்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் எதிர்-காலப்போக்கில் இதன் விளைவாக உண்டாகவிருக்கும் தாக்கம் குறித்து எழும் அச்சம் வினாக்குறியாகவே உள்ளன!!!
No comments:
Post a Comment