வெளிப்படையாக மற்றவர்களின் மானத்தை அம்பலப்படுத்தியவர்கள் பிடிபட்டவுடன் திரைமறைவில் மன்னிப்பு கேட்பது எந்த அளவிற்கு நியாயமாகிவிடும்...
கள்ள முகநூல் கணக்கில் தனிமனித தவறை விமர்சிக்கும் இவ்வாறான மனநல குறைபாடுள்ளவர்களுக்கு கண்டிப்பாக உளவியல் ஆலோசனை மற்றும் பரிசோதனை தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
சமூகத்தின் குறைநிறைகளை விமர்சிக்க அழகிய வழிமுறைகளை கையாள பல வழிமுறைகள் எம்மிடம் இருந்தபோதும் ஏன் வரம்புமீறி கள்ள கணக்குகளில் கையாளாகத தனத்தை வெளிக்கட்டுகின்றார்களோ தெரியவில்லை.
அரைகுறையாக தகவல்களை அறிவது, விடயத்தில் தெளிவற்ற தன்மை, நம்பகத்தன்மை இல்லாத ஆதாரங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பாரை அணுகாமை போன்ற பல காரணங்கள் பொதுவெளியில் சிறிய பிரச்சினை பூதாகரமாக உறுமாற்றப்பட காரணமாகின்றது. அதுமட்டுமின்றி வீண் சந்தேகங்கள், மனஉளைச்சல், கருத்து பரிமாற்றலில் நம்பமின்மை என்பன இன்று சமூக ஊடகங்களினால் அதிகம் உண்டாகியுள்ள மனித நடத்தையியல் வெறுமைகளாகும்.
குறிப்பாக போலி முகநூல் கணக்குகளின் நட்பு கோரிக்கை நிராகரிப்பது, குறித்த பக்கத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புறக்கணிப்பது மற்றும் அதில் சரி பிழை பற்றிய எமது ஆதங்கம், ஆலோசனைகளை பின்னூட்டம் இடாமலிருப்பது போன்றவற்றினூடாக பெருமளவு போலிக்கணக்குகளை இல்லாமல் செய்யமுடியும் என்பது எனது நிலைப்பாடு.
எனவே எமக்கு தரப்பட்ட அருட்கொடையை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சிப்பதோடு மட்டுமன்றி அதனூடாக நாமும் பயன்பெற்று மற்றவர்களும் பயன்பெற வழிவகை செய்வோம்.
"நிச்சயமாக அல்லாஹ் அவனைப் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?" (அல்-குர்ஆன் 96:14)
No comments:
Post a Comment