பாவங்கள் குறித்தான மக்களின் பாரம்பரிய பொதுபுத்தி ஒருவகை விநோதமாக உள்ளது. பாலியல் ரீதியான தனிமனித பாவங்களை இச்சமூகம் மகா கனதியான கண்ணோட்டத்தில் கண்டு அதனோடு தொடர்புடைய மனித தனியன்களை சமூகத்துரோகம் இளைத்த மாயை தோற்றத்தில் காட்சிப்படுத்த முனைவதும் ஒருவகை சடவாத சிந்தனைதான்.
மனிதன் தன்னளவில் தான் சார்ந்து பயணிக்கும் உயிருள்ள உயிரற்ற கூறுகளிடத்தில் நடந்துகொள்ளும் விதமும் அதனை தாண்டிய புறவுருவ காரணிகள் இடத்தில தான் தொடர்புரும் கோணமும் பலவண்ணமாகும். இதனை சுயநலம் என்பதோடு தன்னளவிலான புனித காட்சியென்றும் சாடிவிடலாம்.
பட்சாபாதம் குறித்தான சமூக கண்ணோட்டமும் இறையியல் கண்ணோட்டமும் வெவ்வேறானவையாக இம்மானிட சமூகம் உணர்ந்துகொள்வதாக எண்ணத்தோன்றுகின்றது சமூகக்குற்றவியல் கலாசாரத்திற்கு பொதுமக்கள் அளிக்கும் ஈடுபாட்டை ஒப்பீடு செய்கையில். இஸ்லாத்தின் மிக நுட்பமான குற்றவியில் தண்டனை அணுகுமுறை குறித்தான மேலோட்ட சிந்தனா ஆதிக்கமே இதற்கான அடிப்படை காரணம் என்று புரிந்துகொள்ள முடிகின்றது.
தனிமனிதன் இறைவனுக்கு, தனக்கு தானே மற்றும் பிற மனிதனுக்கு அல்லது சமூகத்திற்கு இளைக்கும் அநீதியானது இறையியல் தளத்தில் எந்த பரினாமத்தை பெற்று இருக்கின்றது குறித்து எமது சமூகத்தின் போதகர்கள் தெளிவூட்டாததன் தாக்கம்தான் ஒரு மனிதன் தான் செய்த அறியாமை தவறைவிட்டும் மீட்சிபெறும் பட்சாபாத வாய்ப்பு முறைமையை தேர்வு செய்யமுடியாமல் போனது என்று கூறிவிடலாமா!!!!!
புனித வேதமான அல்குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை ஹதீஸ் வழிகாட்டலின் சொல், செயலாடலின் பிரகாரம் ஒரு குற்றத்தை நோக்கும்போது எந்தவித அருகதையும் அற்றவனாக மாறுகின்றான் குற்றவாளி மனிதனும் சுற்றவாளி மனிதனும். இதன் மறுதலை கண்ணோட்டம் சீர்திருத்தம் செய்யும் சிறு குழுவினர் எப்போதும் உங்கள் சமூகத்தில் இருந்துகொள்ளட்டும் என்ற மனிதன் மீதான அதீத திணிப்பையும் இவ்வேதமே மேற்கோளிடுகின்றது.
விபச்சாரம் குறித்தான மக்கள்மன்ற அவதானம் உண்மையில் மிலேட்சத்தனமானது. தேவைகள், சூழ்நிலை, அறியாமை என்பதோடு சமூகத்தின் போடுபோக்குகள் இன்னும் அங்கீகாரங்கள் சார்ந்து நடைபெறும் ஒரு பெரும்பாவமே விபச்சாரம். ஆனால் சமூகம் விபச்சாரக் குற்றத்திற்கு அளிக்கும் முன்னுரிமைகள் ஏனைய சமூகவியல் குற்றங்களுக்கு அளிக்கப்படுவதில்லை ஏனோ???
பட்சாபாதம் குறித்தான பொதுமன்ற காட்சிப்படுத்தலை இச்சமூகத்தின் மார்க்கத் தலைமைகள் விபரிக்க இன்னமும் தவறுவிடுவதன் காரணமாகவே பாவங்கள் மீதான கண்ணோட்டம் ஒரு தனிமனிதனின் சுய விருப்பு வெறுப்புகளை தீர்த்துக்கொள்ளும் பழிவாங்கல்களாக பரிணமித்துள்ளது.
No comments:
Post a Comment