Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 17, 2022

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகச்சிவிங்கி

உலகின் உயரமான பாலூட்டி விலங்கு ஒட்டகச் சிவிங்கி. ஆப்பிரிக்கப் புல்வெளிகள், மற்றும் பசுமையான காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. ஆண் ஒட்டகச் சிவிங்கியின் எடை சராசரியாக 1,400 கிலோ வரை இருக்கும். ஒட்டகச் சிவிங்கியின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.


ஒட்டகச்சிவிங்கிகள் நான்கு இனங்களைக் கொண்டது. வடக்கு ஒட்டகச்சிவிங்கி, தெற்கு ஒட்டகச்சிவிங்கி, மாசாய் ஒட்டகச்சிவிங்கி, ரெட்டிகுலேட்டட் ஒட்டகச்சிவிங்கி ஆகும். 


ஒட்டகச் சிவிங்கியின் வாலில் உள்ள ரோமம், மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது. ஒட்டகச் சிவிங்கியின் தோலில் உள்ள திட்டுகள் நமது கைரேகைகளைப் போலவே இருக்கும். ஒரு ஒட்டகச் சிவிங்கியின் திட்டுகளும் இன்னொரு சிவிங்கியின் திட்டுகளும் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை.


வேட்டையாடவரும் விலங்குகளிடமிருந்து மறைவாகத் தப்பித்துக் கொள்ள இந்த உடல் புள்ளிகள் உதவுகின்றன. மரங்களிடையே மறைவில் இருக்கும்போது இதன் உடலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இவற்றின் தோலும் புள்ளிகளும், மரத்தின் நிழலோடு ஒன்றாகிவிட்ட தோற்றம் போலத் தோன்றும். ஒட்டகச் சிவிங்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் கொம்புகள் சிறியது. இவற்றின் கொம்புகள் ரோமத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.


ஒட்டகச் சிவிங்கிகளுக்கு நான்கு வயிற்று அறைகள் உண்டு. உணவைச் செரிமானம் செய்ய இந்தக் கூடுதல் வயிற்று அறைகள் உதவுகின்றன. ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் பருகும் நேரம்தான் அபாயகரமானது. முன்கால்களை அகலப் பரப்பினால்தான் அவற்றால் கழுத்தைக் குனிய முடியும். கழுத்தைச் சாய்த்து நீரைப் பருகும்போது அவற்றால் தங்களைத் தாக்கவரும் விலங்குகளைப் பார்க்க முடியாது.


ஆண் ஒட்டகச் சிவிங்கியும், பெண் ஒட்டகச் சிவிங்கியும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் நின்றுகொண்டு கழுத்தைக் கட்டிச் சண்டையிடும். சில நேரங்களில், ஒரு ஒட்டகமானது, மற்றொரு ஒட்டகச் சிவிங்கியை கீழே தள்ளிவிடும். ஒட்டகச் சிவிங்கியின் கர்ப்பக் காலம் 14 முதல் 15 மாதங்கள். ஒரு குட்டியைத்தான் ஒரு நேரத்தில் பிரசவிக்கும். பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் குட்டியைப் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் எந்தக் காயமும் ஏற்படாது.


சிங்கங்கள் அல்லது ஹைனாக்கள் கன்றுகளை தாக்கினால், ஒரு தாய் சில சமயங்களில் தனது கன்றுக்கு மேல் நின்று. முன் மற்றும் பின் கால்களால் வேட்டையாடுபவர்களை உதைக்கும். ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உணவு மற்றும் நீர் தேவைகள் உள்ளன. சில சமயம் கன்றுகள் அதனுடன் உள்ள தன் நண்பர்கள் குழுவில் இருந்து விலகியும் இருக்கக்கூடும். மேலும் இளம் கன்றுகளில் பாதி சிங்கங்கள் மற்றும் ஹைனாக்களால் கொல்லப்படுகின்றன.


பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். வளர்ந்த ஒட்டகச் சிவிங்களைவிட வேட்டை விலங்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவை குட்டிகள்தான். ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும். நாக்கின் நிறம் நீல வண்ணத்தில் இருக்கும். உறுதியான நாக்கு முள்மர இலைகளையும் சாப்பிட உதவியாக உள்ளது.


ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை ஒட்டகச் சிவிங்கிகளால் கடக்க முடியும். ஒட்டகச் சிவிங்கிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குடிக்கும். அதற்கு தேவையான நீர்ச்சத்தைத் தாவரங்கள் மூலமே பெற்றுக்கொள்கிறது. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கி கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது ஒட்டகச் சிவிங்கி.


ஒட்டகச் சிவிங்கியின் வயதை அதன் திட்டுகளை வைத்துக் கணக்கிட முடியும். அதன் திட்டுகள் அடர்த்தியாக இருந்தால் வயதான ஒட்டகச்சிவிங்கி என்று பொருள். ஒட்டகச் சிவிங்குக்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.


ஒட்டகச்சிவிங்கி வால்கள் பெல்ட்கள் மற்றும் ஆபரணங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய கால்நடைகள் அறிமுகப்படுத்திய அதிகப்படியான வேட்டையாடுதல், வாழ்விட அழிவு மற்றும் தொற்றுநோய்கள் ஒட்டகச்சிவிங்கிகள் அவற்றின் முந்தைய வரம்பில் பாதிக்கும் குறைவாகவே இருந்தன. இன்று ஒட்டகச்சிவிங்கிகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் உள்ளன. வடக்கு ஒட்டகச்சிவிங்கியின் மேற்கு ஆப்பிரிக்க கிளையினங்கள் நைஜிரியாவில் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages