பொதுவாகவே எல்லா குடற்புழுக்களும் வயிற்று வலி, வாந்தி பேதி மற்றும் இரத்தசோகை உண்டாக்கும். அதில் சில வகைகள் கண்கள், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், முதுகு தண்டுவடம், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உடற்தசைகள் போன்ற உறுப்புகளையும் தாக்கும்.
அளவிற்கு அதிகளவான ஒட்டுண்ணிகள் உடலில் இருந்தாலும் மிக அதிகமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிலவற்றை பற்றிக் குறிப்பிடுகிறேன்.
👉 அஸ்காரிஸ் லம்ப்ரிகாய்டஸ்
உருண்டை புழுக்கள் (Round Warm) என்று அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணி புழுக்கள். சுத்தம் மற்றும் சுகாதாரம் இல்லாத திறந்த வெளியில் மலம் கழிக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
குடலில் அதிக அளவில் இனப்பெருக்கம். குழந்தைகளுக்கு. குடல் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வர கூடிய ஒரு ஒட்டுண்ணி.
பெரியவர்கள் அதீத குடற் புண்களால் பாதிக்கப்படுவர். ஆசன வாய் புண் ஏற்படும்.அதிக இரத்த சோகை, வயிற்றில் வலி, இரத்தம் கலந்த பேதி காணப்படும். அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட குடற்பகுதி முழுவதும் அடைப்பட்டு இருக்கும் உருண்டை புழு..இல்லை என்றால் குடல் அழுகி..உயிருக்கு ஆபத்து.
👉 எண்டோஅமீபா ஹிஸ்டோலைட்கா..
அதிகமாக வெளி உணவகங்களில் சாப்பிடும் போது சுத்தம் இல்லாமல் செய்யும் உணவை உண்ணுவதால் ஏற்படும் அமீபியாசிஸ் என்ற குடல் புண் மற்றும் இரத்தம் கலந்த சீத பேதி தொற்று.
இவற்றை சரியான முறையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் இல்லை என்றால் அமீபிக் கோலைட்டிஸ் என்ற மலக் குடலில் துவாரம் உண்டாகும் அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
👉 எக்கினோ காக்கஸ் க்ரானுலோசா
இதுவே வளர்ப்பு நாய்கள் மூலமாக மனிதனுக்கு ஏற்படும் மிக மோசமான தொற்று நோய் ஆகும். நாயின் கழிவுகள் குடிநீர் மற்றும் உணவில் கலந்து விடுவதால் இந்த தொந்தரவு உண்டாகும்.
இது அதிகமாக கல்லீரலில் தங்கி அங்கே பலவகையான முட்டைகளை இனப்பெருக்கம் செய்து கல்லீரலில் சீழ் பிடிக்க வைத்து விடும். சிறுநீரகம் முதல் தசைக்நாற்கள் வரை பரவக்கூடியது.
பல நேரங்களில் வயிறு ஊதிப்போய் ஒட்டுமொத்த ஜீரண உறுப்புகளும் வீங்கிய நிலையில் இருக்கும் போது மூச்சு திணறல் உடன் வந்த நோயாளியின் உடலில் அங்கே இந்த ஹைடாடிட் சிஸ்ட் HYDATID CYST என்ற ஒட்டுண்ணி முட்டைகள் குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பரவிக்கூடியது.
👉 தட்டைப் புளு
Tape worm என்று சொல்லக்கூடிய தட்டைப் புழு சரிவர சமைக்காத மாமிச உணவு வகைகள் மூலமாக பரவக் கூடியது. அதே வயிற்று வலி மற்றும், வாந்தி பேதி தரக்கதடியது என்றாலும் பலருக்கு தசைப்பிடிப்பு, தலை வலி, வலிப்பு நோய் உண்டு பண்ணும் வல்லமை உடையது.
காரணம் வயிற்றில் இருந்து கண், காது, மூளை, முதுகு தண்டு மற்றும் எல்லா உறுப்புகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. சரிவர சிகிச்சை பெற்று கொள்ளவில்லை என்றால் ஒரு மனித உடலில் பதினைந்து வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இது வரை 59 அடி நீள தட்டைப்புழு தாய்லாந்தில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
👉 ட்ராகன்குலியாஸிஸ் கினி புழுக்கள்
வறுமையில் வாடும் மக்களின் உடலில் அதிகமாக காணப்படும் புழுவகை இது. வெறும் காலில் வயக்காடு, சேறு சகதியில் நடப்பதால் தோலில் உள்ள சிறு சிறு விரிசல்கள் மூலமாக உடலில் உள்ளே சென்று அங்கேயே நம் உடற்சத்துகள் மூலமாக இனப்பெருக்கம் செய்து உயிர்வாழும் ஒட்டுண்ணி வகை.
பல நேரங்களில் தோலின் அடியே புழுவாகவே தென்படும். கால் வலி, கால் வீக்கம் ஏற்பட்டு நடக்கவே முடியாது நிலைக்கு உள்ளாக்கும் நோய் தாக்கம். காலனி அணியாமல் நடப்பவர்களை இப்புழுக்கள் அதிகம் தாக்குகின்றன.
No comments:
Post a Comment