இந்த Divina Commedia நாடகம் டஸ்கனி மொழியில் எழுதப்பட்டதால் அம்மொழியே மிக முக்கியமான இத்தாலியமொழியாக மாறி அந்நாட்டின் அரசியல்/கல்வி/ தத்துவஞான/ விஞ்ஞான மொழியாகவும் மாறிற்று. டாந்தே வெறும் இலக்கியவாதியல்ல. De Monarchia அரசியல் / தத்துவ ஞான நூலையும் எழுதியிருக்கிறார். அரசியற் சிந்தனையாளராகவும் கணிக்கப்பட்டவர்.
அவருடைய அரசியற்கருத்துக்கள் அக்கால அரசியலுக்குக் காலத்தை முந்திய கருத்துகளாக அமைந்தமையால் சில காலம் அஞ்ஞாதவாசமும் செய்தவர். இந்திய மக்களுக்கு அவருடைய இலக்கியப்பங்களிப்புக்கள் எதுவிதத்திலும் முக்கியமானவையல்ல என்பது எனது கருத்து.
Tom Hanks நடிப்பில் Ron Howard தயாரிப்பில் வெளிவந்த Angels and Demons, Dception Point மற்றும் The Da Vinci Code, Inferno போன்ற திரைப்படங்கள் இன்றும் உலகளாவிய ரீதியாக பேசுபொருளாக கொள்ளப்படும் திரைப்படங்களாகவே உள்ளன. ராபர்ட் லாங்டன் - எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் ஆகியே ஆகிவிட்டார் ! Dan brown- நமது மறைந்த திரு பாலா மற்றும் திரு சுஜாதா அவர்களை போல சொல்ல வந்த கதையில் உள்ள விஞ்ஞான அடிமட்டத்தை முழுதுமாக அறிந்து தெளிந்து கிட்டத்தட்ட அவர்கள் சொல்கின்ற facts எல்லாமே உண்மையை அடிப்படையாக கொண்ட எதிர்வுகூறல்கள் என்றுதான் கூறவேண்டும்.
முக்கியமாக dan brown அவர்களது கதை ஓர் இரவு அல்லது 48 மணி நேரத்தில் முடிந்து விடும். அதனால் , படிக்க ஆரம்பித்து விட்டால் முடிக்கும் வரை கீழே வைக்க முடியாது. அருவருக்கத்தக்க, வகையில் காட்சி அமைப்பு எங்குமே, இருக்காது. கண்டிப்பாக நமக்கு ஒரு புதிய உலகத்தை திறந்து விடும்.
இவற்றுக்கு அடுத்து நான் அறிந்த வரையில் அதிகமான மக்களால் அறியப்பட்டது கவிஞர் விர்ஜில் ( Poet Virgil) எழுதிய த டிவைன் காமெடி ( The Divine Comedy). இட்டாலிய மொழியில் விர்கில் Dante என்கின்ற மனிதருடன் நரகம், சொர்கம் முதலிய இடங்களுக்கு பயணம் செய்வது போல் எழுதப்பட்டாகும். பிரபல நூலாசிரியர் Dan Brown எழுதிய inferno புதினம் இதை அடிப்படையாக கொண்டதுதான்.
Inferno 2016 இல் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படம். தற்போது வந்துள்ள கொரோனா நோய் தொற்றை அடிப்படையாக்கொண்டு 2016 இல் எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் டான்டேயின் தத்துவங்கள் மற்றும் குறிப்புகளை வெளிப்படையாக காணலாம். குறிப்பாக நரகத்தின் பாவச்சுவடுகள், படிநிலை குறித்தான சிந்தனை அலாதியானது.
No comments:
Post a Comment