சமூகமட்டத்தில் தனது அறிவு, ஆற்றல், மற்றும் ஆளுமைகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு மானிடலும் தன்னளவில் தயாராகுதலை முதன்மை செயலாக கருதியாகவேண்டும். ஏனெனில் ஒரு தனிமனிதனின் வெளிப்பாடுகள் சில வேளைகளில் ஒட்டுமொத்த அவன்சார் சமூகத்தையும் நிர்க்கதியாக்கிவிடும். இந்த நடைமுறைசார் சிக்கலினால்தான் பலர் சமூக களத்தின் தங்களில் வெளிப்பாடுகளை சமர்பிப்பதில் தயக்கங்களை கொண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனதானளவில் கொண்டுள்ள சக்திகள் ஏதோவொரு வகையில் இன்னொருவரின் இருந்து பன்மைத்துவம் அடைந்தவண்ணமே உள்ளது. இதனால் சூழலில் காணப்படும் ஒவ்வொரு தனியனின் ஆற்றல், அறிவு அந்த சமூகத்திற்காக வளமாகும். இந்த வளத்தை நுகர்வதற்கான தளத்தை உருவாக்கிக் கொடுப்பதிலேயே அதன் நுகர்வை நாம் அனுபவித்துக்கொள்ள முடியுமாகும்.
பொதுவாக இந்த தூரநோக்கு கொண்ட சிந்தனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஒருமித்த புள்ளியில் சந்திக்காமல் சிதரிக்கிடப்பதனால் சமூகவியல் சார்ந்த பல நிலைபேர் வேலைத்திட்டங்கள் இன்னும் தூக்கி நிற்பதோடு, தொடங்கப்படாத நிலையும் காணமுடிகின்றது.
எனவே பல்நிலை தரப்பார்களின் சக்திகளை ஒன்றுகுவிக்கும் ஒரு மையப்புள்ளியை நிறுவதற்கான முதற்கட்ட முன்மொழிவு, முன்னெடுப்புகளை அறிமுகம் செய்யவேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கின்றோம். யார் பூனைக்கு மணி காட்டுவார் என்ற நிலையில் இவ்வாறான பல கேள்விகள் கேள்விகளாக மட்டுமே கடந்து செல்கின்றன...
No comments:
Post a Comment