புதிய தகவுகளின் படி வாயுப்பூதங்களான வியாழனிலும் சனிக்கிரகத்திலும் வைரமழை பொழிகிறதென்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்கா வானியற்கழகத்தின் கோள்களாராய்ச்சிப் பிரிவின் மகாநாடொன்றில் கட்டுரை படித்த நாசாவின் தாரைஉந்தல் ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவரும் விஸ்கன்சின் பல்கலைக்கழகப் பேராசிரியருமான கலாநிதி கெவின் பேய்ன்ஸ் உம் கலிஃபோர்னியா சிறப்புப் பொறியியல் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த கலாநிதி மோனா டெலிற்ஸ்கியும் சனிக்கிரகத்தில் வைர மழை பெய்வதற்கான புதிய ஆதாரங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
சனிக்கிரகத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் 1,000 பார்களாகும் (ATM). அதாவது பூமியப்போல ஆயிரம் மடங்கு ஆகும். அந்த வளி மண்டலத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், என்பன பெருமளவிலும் மெதேன், அம்மோனியா என்பன குறிப்பிடத்தக்க அளவிலும் காணப்படுகின்றன.
2004இல் சனிக்கிரகத்தைச் சுற்றிக்கொண்டிருந்த கஸினி விண்கலமானது சனிக்கிரகத்தின் சிலபகுதிகளில் இடம்பெறும் கடூரப்புயல்களைப் பற்றித் தகவல்களைத் தந்துள்ளது. இந்தப் புயல்களின் இயங்குபலம் அங்கேயுள்ள தடித்த முகில்களிடையே இடம்பெறும் கடுமையான மின்னல் வெட்டுக்களில் இருந்து வருகிறது. இந்த மின்னல்களின் காரணாமாக மெதேன் வாயு கார்பன் தூள்களாகவும் ஹைட்ரஜனாகவும் உடைக்கப்படுகிறது.
இந்த கார்பன் துகள்கள் கீழ்நோக்கி இறங்கத்தொடங்குகின்றன. ஆனால் ஒரு 1600 கிலோமீட்டர்கள் இறங்குமுன்னரே கடுமையான வளிமண்டல அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக இந்தத் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு கிரபைற் (பென்சில் கார்பன்) தட்டுகளாக மாற்றப்படுகிறது. தொடர்ந்து இறங்கும் கிரபைற் இன்னொரு 6000 கிலோமீட்டர்கள் இறங்கிய தறுவாயில் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் அதிகரித்த அழுத்தம், கடுமையான வெப்பம் (178 C ) என்பன காரணமாக வைரங்களாக மாற்றப்படுகின்றன. இந்த வைரங்கள் இன்னொரு 30,000 கிலோமீட்டர்கள் இறங்கவேண்டியிருக்கும்.
இந்த அளவு தூரம் இந்த அழுத்தத்திலும் கடுமையாக ஏறிக் கொண்டிருக்கும் வெப்பத்திலும் சுடப்படுகிற வைரங்கள் திரவமாக மாறுகின்றன. உருவாகும் போது இந்த வைரங்களின் பரிமாணம் 1-2 செண்டிமீட்டர்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள் ஆனால் கீழே இறங்கிச் சனிகிரகத்தின் மையத்துக்கு அவை போய்ச்சேரும்போது அது திரவ வைரம் மட்டுமே.. சனிக்கிரகத்தில் மண்ணாலான தரை என்று ஒன்று கிடையாதென்பதனால் பிரயாணம் சனிக்கிரகத்தின் மையத்தை நோக்கித் தொடரும். இவ்வாறு ஒரு ஆண்டில் உருவாகும் வைரங்களின் அளவு குறைந்த பட்சம் 1000 மெட்ரிக் தொன்கள் என்று கலாநிதி பேயின்ஸ் குறிப்பிடுகிறார்.
வியாழனிலும் சனிக்கிரகத்திலும் நடப்பதைப்போல் கோள் மையத்தில் இருக்கும் வைரம் திரவமாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. நெப்டியூனயும் யுரானஸ் ஐயும் எடுத்துக்கொண்டீர்களானால் அங்கெல்லாம் கோள மையத்தில் காணப்படும் வைரங்கள் ஒரு பெரும் திண்மாகக் காணப் படுகின்றன. இதுபற்றி இவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்களாம் இதற்கான பதிலை கலாநிதி பேயின்ஸ் ஒரு நகைச்சுவை முத்தாகவே உதிர்த்தார். எங்களுக்கும் கொஞ்சம் வேதியியல் தெரியுமென்றார். உண்மையில் என்ன நிகழ்ந்ததென்றால் கலாநிதி மோனா டைற்ஸ்கி அம்மையாரின் சிறப்புப் பொறியியல் ஆய்வு கூடத்தில் கஸ்ஸினி விண்கலம் தந்த தகவல்கலை இரட்டித்து (Duplicated) அதே வொல்டேஜ் அளவில் மெதேன் வாயுவினுள் மின்னைப்பாய்ச்சி வைரங்களை உருவாக்கினார்கள். ஆனால் இது மிக மிகச்செலவான ஒரு விவகாரம் என்பதனால் இந்தப்பொறிமுறை விஞ்ஞான கூடத்துக்கு வெளியே பயன்படாது.
இவர்களுடைய ஆராய்ச்சிக்கட்டுரையை மீளாய்வு (Peer Review) செய்த கலாநிதி றேமொன்ட் ஜான்லோஸ் தான் நெப்டியூனிலும் யுரானஸ் இலும் திண்ம வைர மையம் இருப்பதனைக் கண்டறிந்தவராவர். அவர் இவர்களது முடிவுடன் முழுவதாக ஒத்துப்போகிறார். ஆனால் அதே மீளய்வில் பங்குபற்றிய கலாநிதி நடீன் நெற்றிள்மன் அம்மையார் பேயின்ஸ்- டெலிற்ஸ்கி குழுவினரின் ஆய்வுகூட விளைவுகள் சரியேயாயினும் அவற்றில் ஹீலியம்-ஹைட்ரஜன் வாயுக்கள் பங்கெடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வைர மழை இவ்வுலகில் பொலியுமானால் வைரத்தை பெறுமதி இருக்காது. எது அறிதோ அதுவே மதிப்புக்குரியது. அறிவினை போல....
No comments:
Post a Comment