எந்த அளவிற்கு நேரத்தை குறைத்து இலகுமுறையில் தங்களின் அன்றாட வாழ்வியல் போக்கை நகர்த்த தொழிநுட்பம் மேம்படுத்தப்படுகின்றதோ அதே அளவிற்கு மனிதனின் நேரவிரயமும் சமாந்தரமாக அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் WhatsApp Status களையே நாம் பெரும்பாலும் பார்வையிடுவோம். இதில் அநேகமானவர்கள் காதல், காமடி, பாடல், சமய நம்பிக்கை சார் காணொளிகளை அளவிற்கு அதிகமாக இடுவார்கள். அண்மைக்காலங்களில் இதன் தொந்தரவு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத அளவிற்கு மாறிவருகின்றது. இதுபோன்று Facebook Post & Share, Instagram, WhatsApp Forwards, and Etc...
இவையணைத்திற்கு பிரதான காரணமாக இலவசம் என்ற ஒரேயொரு விடயமே அன்றி வேறில்லை என்று தெளிவாக புலனாகின்றன.
இலவசம் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. எல்லாமே வியாபாரமே. உலக முதலாளித்துவ போகிக்கின் மாய விம்பமே இலவசம் என்ற நாமம்.
ஒரு மனிதனின் எண்ணம், சிந்தனை, செயற்பாடு மற்றும் அறிவு ஆற்றல் என்பன தற்காலத்தில் அளவுகோலிடும் தளமாக சமூகவலைத்தளத்தை ஓரளவிற்கு எனும் அனுமானம் செய்யக்கூடியதாகவுள்ளது. நாம் வெளிப்படுத்தும் எந்தவொரு விடயமும் இன்னொருவருக்கு பயனுடையதாக அமைக்கின்றனவா என்று தரம்பிரித்தல் இன்றுள்ள நாகரீக உலகில் மிக முக்கிய அவதானிப்பு காரணியாக அமைகின்றன.
"உலகம் அழிவை சந்திக்க சற்று நேரம் இருந்தால் கூட உனது கையில் இருக்கும் ஈச்சம் விதையை நட்டிவிடு" (ஹதீஸ்)
"கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும் (அல்-குர்ஆன் 2:263)
மேற்படி இரு விடயங்களை உணர்ந்து எமது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
No comments:
Post a Comment