ஏனெனில் தற்கவியல் ரீதியிலாக தனது சிந்தனையை முன்வைத்து விவாதிக்கும் திறன் கொண்ட உயிரியே மனிதன். இவனுடைய பாலியல் ரீதியாலன தேவையும் இதே அளவிற்கு பந்தங்களையும், பாசங்களையும் இரண்டற கலந்து பால்நிலை ரீதியான உடலியல் தேவை தீர்வு அழைக்கப்படுகின்றது.
மானிட வாழ்வியலின் பல உன்னதமான உளம், உடல், சமூகம் சார்ந்த பண்பியல் ரீதியிலான முன்னெடுப்புகளிற்கு ஆண், பெண் பாலின தொடர்பியல் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன. உளவியல் மற்றும் உடலியல் ரீதியான தேவைகள் இதில் பிரதான வகிபாத்திரத்தினை எடுத்துக்கொள்கின்றன.
மனிதன் ஒருவனின் பாலியல் இச்சை தேவை நிவர்த்திக்கப்படாதவிடத்து அது அவனில் உண்டாக்கும் விபரீதமான தாக்கங்கள் மூலமாகவே பல சமூகவியல் குற்றச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. குரூரமான மனோவியல், அதீத பாலியல் மோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை என்று அடுக்கிக்கொண்டே செல்லமுடியும்.
எந்தவொரு சிந்தனை, செயலியல் வெளிப்பாடுகளையும் காமத்தின் மீது எடைபோடும் சமூகவியல் பார்வை மூலமே பல்வேறு மானிடவியல் திறம் முதலீடு செய்யப்படாமல் இருப்பதற்கு தடங்களாக உள்ளது. அத்தோடு காமத்தை கொண்டு சமூகவியல் எடைபோடல் என்ற பிற்போக்கு சிந்தனைவாதம் களைந்தெறியப்படுவதனூடாகவே எம்மால் அடைத்த தலைமுறைக்கு தொழிநுட்பவியல், பொருளியல் மற்றும் சமூகவியல் சார்ந்த மானிடவியல் ஈட்டல்களை நுகரமுடியும்.
No comments:
Post a Comment