எல்லா மனிதனும் சமூகமயமாக்கப்பட்ட பிராணி ஆகின்றான் ஏதோவொரு வகையில். இந்தவகை வலைப்பின்னல் மூலமாகவே சமுதாய இயங்கியல் தன்மை நிலைத்தன்மை அடைகின்றதனை காணமுடிகின்றது. சமூக நுழைவில் பிரதான எடுகோளாக நான் பேசுகின்ற நன்மதிப்பு கருதப்படுகின்றது. இதே நேரத்தில் குறித்த நன்மதிப்பின் தன்மை, பலத்தை எடுகோளாக கொண்டே குறித்த நபரின் பின்னணி கருதுகோளிடப்படுகின்றது.
சமகாலத்தில் பொதுவெளியில் நடமாடும் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலின் பின்னாலும் ஏதோவொரு இருளான பக்கங்கள் இருந்தவண்ணமே உள்ளது. இதனால்தான் அவன் தொடர்ந்தும் மனிதன் என்ற தரத்தில் நிலைகொள்கின்றான். இல்லை மனிதனை தாண்டிய அடுத்த உயரிய கண்ணியமிக்க பரிணாம நிலைக்கு நிலைமாற்றம் அடைந்திருப்பானே!
அடையாளப்படுத்துகை என்ற ஒரு காரணி எமக்கு எல்லோருக்கும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சாதகமாக அமையப்பெற்றிருக்கும். குறித்த தருணத்தில் இதற்கு நேர்முரணாக கடந்தகால கசப்பான சம்பவம் அல்லது இருள் பக்கம் வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த தருணத்தில்தான் ஒரு மனிதன் மக்களின் மூலமாக தரப்படுத்தப்படுகின்றான்.
குறித்த தருணம் சிலருக்கு ஒருமுறை அல்லது பலமுறை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த ஒரு தருணத்தில் மனிதன் உணர்ந்துகொள்கிறான் தான் இந்த சமூகத்தின் மத்தியில் இதுவரை சம்பாதித்த நன்மதிப்பின் எடைகள் குறித்து..
No comments:
Post a Comment