பெற்றோர் பராமரிப்பு என்று ஒரு அவசியப்பாட்டினால்தான்.
பரிணாம வளர்ச்சியில் ஆகாயவாழிகள் மற்றும் கூர்ப்பில் முன்னேற்றமான Hominoidea உயிரணங்களான குரங்குகள், சிம்பன்ச், தேவாங்கு, கொரில்லா மற்றும் மனிதன் போன்ற அங்கிகளில் மேற்குறிப்பிட்ட பெற்றோர் பராமரிப்பு என்ற உன்னதமான உயிரியல் பண்பு காணப்படுகிறது. இதில் மனித குழந்தை அதிக பெற்றோர் பராமரிப்பு உட்படுத்தப்படுகின்றது. இதற்கு மனித மூளையின் வினைத்திறன் தன்மையும் ஒரு செல்வாக்குமிக்க காரணியாக எம்மால் அடையாளம் காட்ட முடியும்.
மனித குழந்தையை பொருத்தமட்டில் முதல் 36 மாதங்கள் மூளை வளர்ச்சியில் பாரியதொரு செல்வாக்கை பெற்றோர் பராமரிப்பு எடுத்துக்கொள்கின்றது. அத்தோடு சூழலுக்கு இசைவாக்கப்படும் உடலியல் திறன், நுணுக்கமான சிந்தனை, தர்க்கவியல் ரீதியான விவாதம், என்பவற்றோடு பந்தம், பாசம் மானிடவியல் தொடர்புடமை ரீதியிலான புரிந்துணர்வுகள் என்பன இந்தப் பெற்றோர் பராமரிப்பின் ஊடாகவே மேம்படுத்தப்படுகிறது. ஏனைய அங்கிகளை பொறுத்தமட்டில் உணவு, வாழிடம், இனப்பெருக்கம் மூன்று அடிப்படையாகக்கொண்ட சூழலியல் காரணிகளோடு தமது வாழ்வை நிறைவு செய்துகொள்கின்றன.
ஆனால் மனிதன் அவ்வாறில்லை. மனிதனைப் பொறுத்தமட்டில் தொடர்பாடல், சூழலின் ஆதிக்கம் செலுத்துதல், மற்றும் சூழலை மாற்றியமைத்தல், தனது சிந்தனை, செயற்பாடுகளை கொண்டு வழிப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்கு முதற்கட்டமான பெற்றோர் பராமரிப்பு தாக்கம் அளிக்கின்றது.
மேற்படி பெற்றோர் பராமரிப்பின் காரணமாகவே மனிதன் ஏனைய விலங்குகளிலிருந்து தன்னை தனித்துவமாக பிரகடனப்படுத்திக் கொள்கின்றான். இந்த அடிப்படையில்தான் பரிணாம வளர்ச்சியின் தாக்கம் செலுத்தக்கூடிய உயர் தரப்பினராக மனிதர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அசைவும் உணர்வுகள் மற்றும் திறன்கள் என்பன மேம்பட்ட உயிரியல் அணுகுமுறையாக அறிவியல் மட்டுமன்றி உலகியலும் கருதுகின்றன.
மேற்படி காரணிகளை புரிந்துகொண்ட இயற்கையே மனிதனை இவ்வுலகிற்கு ஏற்றால்போல் தயார்படுத்த நீண்ட கால எல்லையை எடுத்துக்கொள்கின்றது....
No comments:
Post a Comment