சமூகவியல் செயற்பாடுகளும் இதனையொட்டியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எந்தவொரு சிந்தனையையும் அல்லது செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தும்போது பொருளாதாரம், மனித வலு என்ற இரு பிரதான காரணியில் தங்கி நிற்கின்றது. இந்த இரு காரணிகளில் ஏதோவொன்றை மட்டுமே நாம் சேவையாக பெற்றுகொள்ள முடியுமாகவிருக்கும். அல்லது இவை இரண்டையும் பகுதியளவு சேவையாக பெற்றுகொள்ள முடியுமாகவிருக்கும்.
ஒட்டுமொத்தமாக நாம் ஆராயும்போது பெரும்பாலான வேலைத்திட்டங்களின் தொடர்ச்சித்தன்மை சிக்கலுக்கு உள்ளாகாமல் நிலைபேராக வழங்கப்பட்டுக்கொண்டு இருப்பது மேற்படி காரணிகளின் பூரண அனுசரணை மூலமாகவே.
சமூகவியல் களத்தில் முழுநேர பணியார்களை அரிதாகவே எம்மால் கண்டுகொள்ள முடியுமாகவிருக்கும். அவ்வாறு இருந்தபோதும் அவர்களை வலுவூட்டும் பின்னணி காரணிகளை காரணம் காட்டியே வலுவிழக்க செய்துவிடுவது எமது சமூகத்தின் இயல்பாகிவிட்டது. இதனடிப்படையில் எமக்குள் காணப்படும் பன்மைத்துவத்தை பிரிவினையாக காணாது சமூக களத்தில் பயணிக்கும் எம்மவர்களை வலுப்படுத்த முன்வரவேண்டியது எம்மொவ்வொருவரதும் கட்டாயகக்கடமையாகும்.
No comments:
Post a Comment