பெண்ணின் திருமண வயதெல்லை என்பது நாட்டுக்கு நாடு பன்மைத்துவம் கொண்டது என்பது முதலாவது நாம் புரிந்துகொள்ளவேண்டியது. இதற்கப்பால் பாரம்பரிய சடங்கு சம்ரதாயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் மிதமிஞ்சிய குடிமக்களை கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பான்மை சமூகம் விவாதிக்கவேண்டிய உப பிரிவுகளை குறித்து நாம் அதீத கரிசனை செலுத்தாமல் இருப்பது சிறுபான்மை சமூகத்தின் தனித்த சட்டவியலுக்கு கேடயம் என்றுதான் என்னால் கூறமுடியும்.
குறிப்பாக போசனைப் பெறுமானம், சூழல் தகைமை, சுகாதாரம், கல்வி, பால்நிலை வலிமை குறிப்பாக சமூக பொது உளவியல் என்பன குறித்த சட்டத்தில் மீள்வசிப்பு செய்யவேண்டிய விடயதானங்களாகும். அத்துடன் "ஒரே தேசம் ஒரே சட்டம்" என்பது வாயளவில் இணைப்பாக இருந்தபோதும் நடைமுறை ரீதியில் பாரியதொரு சிக்களையும், கடப்பாடு கடினத்தையும் உண்டாகும் என்பதே உண்மை.
பேரினவாதமாக இருக்கட்டும், பெரும்பான்மையாக இருக்கட்டும்; திருமண வயதெல்லை மீதான தனியார்சட்டம் ஆய்வுமுறை ரீதியில் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை காட்டிலும் சிங்கள சமூகத்திலியே அதிக பின்னடைவான பிறழ்வுகளை உண்டாக்கி வருகின்றது. எனவே இவை குறித்து நாம் சற்று மௌனம் காப்பது சிறந்தது என்ற தன்னிலை நிலைப்பாடு சிறப்பானது...
No comments:
Post a Comment