இந்நாட்களில் மிகமோசமான செயலாக கருத்தப்படவேண்டியதே சிந்தனைத்திணிப்பு என்ற காரணி. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் வெகுஜன ஊடுருவல் சிந்தனைத்திணிப்பிற்கு பிரதான அடித்தளத்தை விரித்துள்ளது எனலாம். அரசியல், அறிவியல், ஆன்மீகம், பொருளியல் மற்றும் மானிடவியல் என்ற பல்நிலை தளத்திலும் இதன் அச்சுறுத்தல் உணரமுடிக்கின்றது. இதனால் தனிமனித சுதந்திர உணர்வு மற்றும் கருத்தியல் வெளிப்பாடுகள் கூட மட்டுப்படுத்தப்பட்ட பரவலாகத்திலேயே இலக்கு குழுவினரையும் சென்றடையவேண்டிய தரப்பாரையும் மேவுகின்றது. இந்நிலைமை அண்மைக்காலமாக அடக்குமுறை ரீதியிலான விமர்சனப்பார்வைக்கு துறைசார் நிபுணர்களையும், கல்வியலாளர்களையும் ஆளாகியுள்ளது. இது ஒருவகை சடவாதத்தின் வெளிப்பாடாகவே எம்மால் எடைபோட வேண்டிய விடயத்தனம். ஏனெனில் இங்கு தொழிற்படும் தரப்பார் அல்லது மோதிக்கொள்ளும் சாரார் அறிவார்ந்த சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதே... மேற்படி விடயதானத்திற்கு அப்பால் சாமானிய மானிடன் வாழ்வில் சிந்தனைத்திணிப்பு எந்த அளவிற்கு சமூகவியல் ரீதியிலான சிந்தனா மாற்றத்தில் தனது வெளிப்பாடுகளையும், வகிபாத்திரத்தையும் எடுக்கின்றது என்பது பெரியதொரு கேள்விக்குறியாக நிலையாகிவிட்டது?
கருத்தியல் வேற்றுமை என்பது ஒரு கருத்தில் நிலைகொள்ளும் சாராரின் வாசிப்பு, தேடல், ஆய்வு மற்றும் சூழலியல் நிபந்தனைகளை அடியொத்தியதாக விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டிய தலைப்பாகும். வெறுமனே யார் இந்த கருத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதை தாண்டிய ஏன், எங்கே, எப்போது, எவ்வாறு என்ற பல்தரப்பட்ட பின்னணியில் விசாலபார்வையில் மேட்டுக்குடி பொதுவெளி (Interluctual Dialogue) உரையாடலுக்கு தேர்வுசெய்யப்படவேண்டியது.
No comments:
Post a Comment