அவற்றிற் சில இதோ!
👉 மழை தேவையான இடங்களுக்கு மழையைக்கொண்டு சேர்க்கின்றன
வெப்பமண்டலப் புயல்கள் மழை உற்பத்தி செய்வதில் வினைத்திறன் வாய்ந்த இயந்திரங்கள் எனலாம். மழை அதிகம் வீழ்ச்சியடையாத உலகின் பல பாகங்களில் இவை மட்டும் தான் நிலத்தை ஊற வைப்பவை. இந்த ஊரல் சில ஆண்டுகளைத் தாக்குப்பிடிக்கும்.
கிழக்குப் பசிஃபிக்கில் தாய்வானுக்கு அண்மையில் உருவாகித் தேய்ந்து கொண்டு போகும் வெப்பவலயப் புயல்களின் எச்சங்கள் கலிஃபோர்னியாவுக்குள் நுழையும் போது அங்குள்ள பாலை நிலங்களுக்கு அற்ப சொற்ப மழையாவது கிடைக்கிறது. சில சமயங்களில் எரியும் காடுகளை அணைப்பதற்கே இந்த மழை தேவைப்படுகிறது.
ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் இவ் வரண்ட நிலங்களிலேயே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் இயல்பு. சவுதி அரேபியா, லிபியா போடும் வெள்ளங்களையும் நாம் படங்களில் / வீடியோக்களில் / செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
👉 சிவப்பு அலை அல்காக்களையும் பக்டீரியாக் காலனிகளையும் உடைத்து விடுகின்றன
ஒரு வெப்பவலயப்புயல் இவ்வாறான நீர்த் தேங்குதல்களை உடைத்து அங்கு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்குகின்றன. அதன் மூலம் உட்பிராந்தியங்களில் தேக்க நீரைக் கால்நடைகளுக்கு உகந்தவையாக்குகின்றன.
கடற்கரைகளையும் ஓரக்கடலையும் என்றுமில்லாதவாறு சுத்தமாக்கி மக்களுக்கு உல்லாசப் பகுதிகளை உருவாக்கிக் கொடுக்கிறது.
உரங்கள் போன்ற வேதிப்பொருட்கள் செறிந்து பாசி பிடிக்கும் முகத்துவாரப் பகுதிகள் தூய்மையாக்கப்பட்டு கடலுயிரினங்கள் பெருகவும் அந்த இடங்களில் மீன்பிடி சாத்தியமாகவும் வழிபிறக்கிறது.
ஒரு காலத்தில் சிவப்பு அல்காக்கள் மூடிய இடங்களில் வீசு காற்றுக்களின் மூலம் வரும் புதிய ஒட்சிசனேற்றம் காரணமாக புதிதாகக் கடலுயிரினம் பெருகுகிறது.
👉 உலகளாவிய ரீதியில் ஒரு வெப்பச்சமனாக்கம் இடம்பெறுகிறது
துருவங்களுக்கும், நிலநடுக்கோட்டுக்கும் இடையிலான ஒரு வெப்பச் சமநிலையாக்கம் புயல்களால் உருவாகிறது.
நிலநடுக்கோட்டுப் பக்கத்தில் விழும் வெப்ப வீச்சு அதிகம். இந்த வெப்பம் கடல்களுக்கு மாற்றப்பட்டு அவற்றின் மீது சில மைல்கள் உயரத்துக்கு எப்போதும் வெப்பம் நிறைந்த ஈரப்பற்று இருக்கும். இந்த வெப்பம் கலந்த ஈரப்பற்று கோடையில் ஆரம்பித்து இலையுதிர் காலத்தூடும் நிலைத்து நிற்கும். புயல்கள் இந்த வெப்பத்தை நடுக்கோட்டிலிருந்து அப்பாலாக துருவத்தை நோக்கி மாற்றித் தருகின்றன, கடல் நீரோட்டம் போன்ற வேறு பல காரிணிகளும் இதனைச்செய்தாலும் புயல்களை விட வினைத்திற்ன் வாய்ந்த வெப்ப மாற்றிகள் வேறு கிடையாது. புயல்கள் இல்லையெனில் நடுக்கோட்டு வெப்பநிலை உயிர்வாழ்வுக்குச் சகிக்க முடியாதாக இருக்கும். துருவங்களை அண்டிய பிராந்தியங்களும் கடும் குளிர் காரணமாக உயிரினங்கள் வாழ் முடியாத பிரதேசங்களாக இருக்கும்.
👉 தடுப்புத் தீவுகளை (Barrier Islands) உரப்படுத்துகிறது
பொதுவாகத் தடுப்புத் தீவுகள் பாதிக்கப்படுவதாக நாம் எண்ணினாலும் உண்மை அதுவல்ல. பகதடவைகளில் புயல்கள் ஆழ்கடலைக் கடைந்து வாரி ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவந்து தடுப்புத்தீவுகளில் போடுவதனால் அவை உயிர்ப்படைகின்றன. புயல்கள் இல்லயேல் அவை வரண்டு மணலாகி நாளடைவில் கடலினுள் ஆழ்ந்து விடும். புயல்கள் தடுப்புத் தீவுகளைப் பெருங்கரையை (SHORES OF THE MAINLAND) நோக்கித் தள்ளுவதனால் கடல் எல்லையும் உரமாக்கப்படுகிறது.
2004 சார்ளி புயலுக்கு முன்னும் பின்னும் தென்மேல் ஃப்ளோரிடாவிலுள்ள வட கப்டீவாத்தீவின் பார்வைகள் இரண்டு.. இங்கே மணல் பெருங்கரையை நோக்கித் தள்ளப்படுகிறது.
👉 உள்நாட்டுக் காடுகளில் வர்க்க விருத்தி இடம்பெறுகிறது
வித்துக்கள் நிலத்தில் விரிவாக வீசியெறியப்படுகின்றன. அவ்வாறு வீசியெறியப்படாதவை இன்னும் பல மைல்கள் கொண்டு செல்லப்பட்டுப் புதிய இடங்களில் தாவர இனம் விருத்தியடைகிறது. புயலுக்குப் பின்னான ஆண்டுகளில் காடுகள் விரிவடைந்து புதுப்பொலிவு பெறும்.
புயற்காற்றுக்கள் வீழும் இலைகளை வெகுவாகப் பரப்பி விடுவதால் கோடையில் காடுகள் பற்றி எரியும் அபாயங்கள் தணிக்கப்படுகிறது தீயாலும் நகர விரிவாக்கல்களாலும் இழக்கப்பட்ட காட்டு நிலங்களுக்குப் புயல்கள் உண்மையில் ஒரு உயிரோட்டம் தரும் வரப்பிரசாதம்.
சிலசமயங்களில் கிளைகளின் முறிவைக்கூட நாம் ஒரு PRUNING செயர்பாடு என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது.
புயல்களால் இலைகள் தூக்கிவீசப்படும்போது நெடுந்தூர வித்துப்பரம்பல் இலகுவாக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிரது.
புதிய புயல்கள் காடுகளுக்குப் புதிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவரும் போது மர வளர்ச்சி உந்தம்பெறுகிறது. இதனால் புயலுக்குப் பின்னான ஆண்டுகளில் பறவைகளிலிருந்து விலங்குகள் வரை எண்ணிக்கையும் மேலெழுகிறது.
No comments:
Post a Comment