தன்னளவிலான முயற்சியில் சுயமுன்னேற்றம் அடையும் ஒருவனின் வாழ்வியலை கண்டு பெரிதும் பொறாமை கொள்வதோடு அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் தங்களை தாங்களாகவே உளவியல் சித்திரவதைக்கு ஆளாக்கிக்கொள்ளும் பல முகமூடி சமூக ஆர்வலர்களை காணமுடிகின்றது.
உண்மையில் இந்தப்போக்கு வெகுஜன ரீதியிலான முதலாளித்துவ கொள்கையை சார்ந்த பண்பியலாகும். இந்தப் பண்புகொண்ட சமூகத்தில் மதிக்கக்கூடிய மாந்தர்கள் குறித்த சமூகத்தின் புற்றுநோய் கலங்களுக்கு ஒப்பனாவர்கள். இவர்களை அழிப்பது மிகக்கடினமான சமூகவியல் வேலையாக இன்று உணரப்பட்டுள்ளது.
உள்ளூர் தொடக்கம் தேசிய மையநீரோட்டம் வரை இந்தவகையான சாரார்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றனர். குறிப்பாக நாம் வாழும் சூழலில் இந்த மனோவியல் தாக்கத்திற்கு அதிகளவில் உள்ளீர்க்கப்படுபவர்கள் சமூக சேவையாளர்களும், அரசியல்வாதிகளும் என்ற மக்கள் மட்டத்தில் பணியாற்றக்கூடிய தரப்பினர்தாம்.
மேற்படி தரப்பார்களில் கடும்போக்கு நடைமுறைகொண்டவர்களும், மிதவாத போக்குகொண்டவர்களும் காணப்படுகின்றார்கள். எது எவ்வாறோ குறித்த மனப்பாங்கு உண்மையில் சமூகவியல் ரீதியான மற்றும் மானிடவளப் பயன்பாட்டியல் மேலாண்மை ரீதியிலான படுமோசமான விளைவுகளை உண்டுபண்ணும் சக்திகொண்டவை. சமூகப்பணியில் ஒருவருக்கு கிடைக்கும் சந்தர்ப்பம், சூழல் மற்றும் வாய்ப்புகள் என்பன குறித்த நபரின் முயற்சி, முதிர்ச்சி மற்றும் சமூகவியல் அந்தஸ்து, மரியாதை, நம்பிக்கை சார்ந்த விடயங்களை பொறுத்து பன்மைத்துவம் அடைகின்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
"எதை நீ தேடுகிறாயோ! அதுவும்; உன்னை தேடுகிறது" என்ற Zikra Nawhal இன் மேற்கோளை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
No comments:
Post a Comment