விசேடமாக சமூக வலைத்தளங்களில் மற்றும் வெகுஜன வெளியில் முனைப்புடன் தனது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் எத்திவைக்கும் ஆர்வலர்களை எல்லாவற்றக்கும் விரல் காட்டிவிட்டு தாங்கள் ஒதுங்கும் சோம்பேறிகளையும், சுயநலக்காரர்களையும் இன்று அதிகமாக காணக்கிடைக்கின்றது. இந்த சாடல் நிலைப்பாடு அடுத்த தலைமுறைக்கான இயங்கியல் ரீதியிலான மானிடவள வெற்றிடத்தையும் இடைவெளியையும் தோற்றுவிக்கும் பிரதான காரணியாக அமையும்.
ஏன் இவ்வாறன மனோவியல் மக்கள் தோற்றம் பெறுகிறார்கள் என்ற பின்னணியை நாம் ஆராய்ந்தால் பிரதானமாக அமையும் காரணம் குறித்த தரப்பார்களின் சுயநல குளிர்காய்தல் மட்டுமே அமைகின்றது. ஆனால் இவை வெளிப்படையாக உடன் தெரியாவிட்டாலும் அவற்றை ஆழமாக ஆராய்ந்து அதில் காணப்படும் சமூகவியல் சாதக பாதகங்களை ஒப்பீடு செய்யும்போது மட்டுமே எமக்கு பல வெளிப்படா உண்மைகள் புலனாகின்றன ...
இவற்றுக்கு அப்பால் சிலர் இயங்குநிலை சமூக ஆர்வலர்களை சாடுவதை புறந்தள்ளிவிடவும் முடியாது... ஏனெனில் இவர்கள் உங்களை சாடுவதனூடாக அவர்களின் இயலாமையை உணர்ந்து உங்களிடம் காணப்படும் இயலுமை மூலமாக தாங்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை உங்களின் மூலமாக நிறைவேற்ற தங்களின் பங்களிப்பை அளிப்பதாகவும் உள்ளன.
எது எவ்வாறோ
சமூக களத்தில் பணியாற்றும் நபர்கள் உங்களின் உழைப்பு, நேரம், சிந்தனை, உடலியல் செயற்பாடுகளை முதலீடு செய்வது சுயநலங்களுக்கு வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்ற விடயத்தில் மிக நிதானமாக அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையேல் நீங்கள் ஒரு பகடைக்காயாகவும், எய்பவன் வில்லின் அம்பாகவும் தொழிற்பட்டுவிடுவீர்கள்.
அத்தோடு எல்லா சமூக பிரச்சினைகளுக்கும் நீங்கள் தலைபோடவேண்டும் என்ற நிர்பந்தம் உங்களுக்கு இல்லை. உங்களின் தகுதி, துறைசார் பிரச்சினை மற்றும் சூழலியல் பின்னணிகளை அடிப்படையாக்கொண்டு அவற்றில் உங்களின் பங்குபற்றுதல் நிலைப்பாட்டை வெளிகாட்டுங்கள். இதுவே தூரநோக்கு சமூகவியல் இயங்குநிலைக்கு உங்களுக்கு சாதகநிலையை வலுவூட்டும்.
சமூக மட்டத்தில் நீங்கள் தொடர்பாடும் ஒவ்வொரு ஆளிடைத்தொடர்பின் பின்னணி உணர்ந்து உங்கள் சமூக பயணத்தை முன்னோக்கி நகர்த்துங்கள்.
No comments:
Post a Comment