எந்தவொரு வரைபை நாம் எடுத்துக்கொண்டாலும் அதன் தொழிற்பாட்டியல் தளம் நடுப்பகுதியை அண்மித்த எல்லைப்பரப்பில் கணமுடியுமாகவிருக்கும். இந்த அடிப்படையில் சமூகமட்டத்தில் இயங்கியல் தரப்பினராக அடையாளம் காணப்படுபவர்கள் இடைத்தட்டு வரக்கத்தரே. அத்தோடு கல்வி, பொருளாதாரம், உரிமைசார் விடயங்கள், மிதவாத மற்றும் தர்க்க ரீதியிலான சிந்தனைப்பாங்கு, மக்களவை மனோவியல் போன்ற பண்புகளில் முனைப்புடன் அக்கறை செலுத்தும் நடைமுறை சாத்தியப்பாடான போக்கை இவர்களிடமே காணமுடியும். குறிப்பாக இந்த சமூகத்தை சார்ந்தவர்களே சமூகத்தின் பெரும்பாலான தளங்களில் வியாபித்து காணப்படுகின்றார்கள்.
மேற்படி சாராரை கொண்டு செய்யப்படும் எந்தவொரு முன்மொழிவுகளும் அதன் சுயாதீன தன்மையை விட்டு விலகுவது மந்தமாகவே காணப்படும்.
எனவே நாம் மேற்கொள்ளும் சமூகவியல் அபிவிருத்தி, முன்மொழிவுகள் மற்றும் கருத்திட்டங்களில் இலக்கு பிரிவினர் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்பது சமகாலத்தில் எழுந்துள்ள பாரியதொரு நடைமுறைசார் சவாலாக அடையாளம் காணப்படுகின்றது...
No comments:
Post a Comment