இந்த தன்னிலை வெளிப்பாடுகள் சமூகமட்டத்தில் குறிப்பாக இஸ்லாமிய மக்களவையில் அநேக பொழுதுகளில் பால் நிலை சமத்துவத்தை உறுதி செய்வதில் பிற்போக்காக தொழிற்படுவதனை காணலாம். இந்த சமுதாய அடிப்படை சிந்தைவாதம் இருவகையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
1 - ஆணாதிக்கம் / பெண் அடிமைத்துவம்
2 - சுயத்தின் சமூக அங்கீகார அச்சம் / தன்னிலை விருப்பு வெறுப்பு
மேற்படி இரு காரணிகளும் ஏதோவொரு வகையில் பெண்ணிய சமூகத்தை சார்ந்ததொன்றாகவே கருதமுடிகின்றது.
சமூக உரையாடலில் பெண்களுக்கான அங்கீகாரம் மற்றும் சுதந்திர உணர்வு அவள் கொண்டுள்ள ஆன்மாவின் அடையாளத்தை எடுகோலிடுவதாக அமைவது மிக வரிதாக்கள் நிலையிதான். இதனால்தான் சமூக ஊடக மற்றும் ஆவணமாக்களில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் புறத்தோற்ற அடையாளமான முகத்தை வெளிக்காட்டுவதை தவிர்ந்துகொள்வதாக ஊகிக்கமுடிகிறது. இது ஒருவகை உளவியல் ரீதியிலான சமுதாய அடக்குமுறைதான். இதனை வெறுமனே ஆணாதிக்க வெளிப்பாடு என்று ஒருதலைப்பட்ச சாடல் தவறான அணுகுமுறையாகும்.
சிந்தனை மற்றும் செயற்திறன் ரீதியில் தன் சுயத்தினை வெளிக்காட்டும் உரிமை எப்போது புறத்தோற்றத்தில் தங்கியுள்ளது என்ற நிலைக்கு சமூக அனுமானம் வந்துவிட்டதோ அப்போதே பெண்களின் மூலமாக சமுதாய பங்குபற்றுதலில் நுகர்வை கிரகிக்க தவரிவிட்டோம்.
உண்மையில் நாம் விவாதிக்கவேண்டிய தலைப்பே பல்லின சமூக சூழலில் எம்மவர்கள் பொதுமை வெளிப்பாடு எவ்வாறு கட்டமைக்கப்பட்டவேண்டும் என்பதையே!!!!
No comments:
Post a Comment