இதே நேரம் மானிட வாழ்வியல் கோலத்தை தீர்மானிக்கும் பிரதான நியமமாறிலி அளவீடாக தொழிற்படுவதனை உணர்ந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு அளிக்கப்பட்ட வரையறை செய்யப்பட்ட நேரத்தினுள் தனது படைப்பிற்கான நோக்கத்தை இப்பூமியில் பூர்த்தி செய்து விடுகின்றான். விலங்குகள் மனிதனை பொறுத்தமட்டில் தன்னை பொதுமைப்போக்கில் வேறுபடுத்திக்கொள்கின்றன. ஆனால் மனித தனியன் தன்னை ஏனைய உயிரியிடத்திலிருந்து பாகுபடுத்திக்காட்ட இந்த நேரத்தை பிரதான பண்பாக உபயோகம் செய்கின்றான்.
ஒவ்வொரு மானிடனும் தனது சமூகத்தில் தங்கே வாழ்வது கடமையானதாக இருக்கின்றது. இதுவே மானிட வாழ்வின் அத்தியவசியப்பாட்டை உணரச்செய்யும் துணை மூலம். இருந்தபோதும் நேரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில்பாட்டினை தீர்மானம் செய்யும் தானத்தை எடுத்துவிடுகின்றது.
சமூக வாழ்வில் இயங்கும் ஒவ்வொரு மானிடனையும் இந்த நேரமே வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. நேரத்தில் தனது முழு இயக்கத்தையும் அடமானம்வைத்துள்ள மனிதனின் வாழ்க்கை எவ்வளவு வினோதமானது பாருங்கள். நேர், மறை சிந்தனை மற்றும் செயற்பாடுகளுக்கு இடையில் மிக மெல்லிய திரைதான் உண்டு. அந்த திரை நேரம்தான் என்று உணர்வதற்கு மனிதனுக்கு மிக நீண்டகாலம் தேவைப்பட்டது விடுகின்றது. இதனால்தான் தனது கைசேதத்தையும், கைங்கரியத்தையும் தனது வாழ்க்கையின் அந்தத்தில் உணர்ந்துகொள்கின்றான்.
இப்பிரபஞ்சம் எல்லோருக்கும் சமத்துவமான சந்தர்ப்ப வாய்ப்புகளை அளித்தபோதும் நேரத்தில் தனது முதலீட்டை ஆரோக்கியமாக பிணைப்பவன் வாழ்வில் உயற்சியினை அடைந்து கொள்கின்றான் என்பதுவே இந்த பிரபஞ்ச பொது விதியாக எழுதப்பட்டுவிட்டது.
"காலத்தின் மீது சத்தியமாக" (அல்-குர்ஆன் 103:1)
No comments:
Post a Comment