இதனால் பாதிப்பு ஏதுமுண்டா?
#வலிப்பு_எவ்வாறு_ஏற்படுகிறது
மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.
#மூட_நம்பிக்கை
வலிப்பு நோய் என்பது சமூகத்தில் ஒரு புறக்கணிக்கப்படும் நோயாக கருதப்படுகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்பது தான் உண்மை. இன்றைய சமூகத்தில் தற்போதும் வலிப்பு நோய்க்கு கைகளில் சாவி, கத்தி, சங்கிலி போன்றவைகள் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது முற்றிலும் தவறான மூட நம்பிக்கை.
வலிப்பு நோய் வரும்பொழுது, அவர்களுக்கு கை கால் எல்லாம் இழுத்து இழுத்து கொள்ளப்படும்..
அன்றைய பழைய காலங்களில், வலிப்பு வரும்போது, அவர்களை ஒரு Control ku கொண்டு வர, அவர்கள் கைகளை பத்திரமாக பிடித்து, நகராமல் இருக்க, இரும்பு உலக்கை, அல்லது இரும்பு கட்டிலின் காலை இறுக்கமாக , கையில் பிடித்தார் போல் வைப்பார்கள்..
#இரும்பு_பொருளை_பிடிக்க_காரணம்
வலிப்பு வரும்போது, அவ்வளவு எளிதாக இரும்பை நகர்த்த முடியாது. கையும் எங்கும் அடிபடாமல் இருக்கும் என்பதற்காக. இரும்பு கைகள் கொடுப்பதால் எந்த குணமும் ஆவது இல்லை. கைகளுக்கு அடிபடாமல் இருக்க ஒரு முன் ஜாக்கிரதைக்காக செய்யப்படும் செயல்.
இந்த பழக்கம், நாள் அடைவில் விஷயம் என்று வந்து புரியாமல் மூடநம்பிக்கையாக மாறி விட்டது. வலிப்பு வருபவர்களுக்கு இரும்பு சாவி கத்தி கம்பி இதுபோன்று கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் நோயாளிகளை காய படுத்துகிறார்கள் காப்பாற்றுவதை விட்டுவிட்டு.
#தெரிந்து_கொள்ளவேண்டியவை
வலிப்பு ஏற்படும் போது அதற்கான முதலுதவி செய்து உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்ட நபரை 3 அல்லது 4 நிமிடம் ஒரு நிலையாக படுக்கவைத்து அவரின் உடைகளை தளர்த்தி விடவேண்டும், காற்றோட்டத்தை விடவேண்டும், வலிப்பின் போது நாக்கை கடித்துக்கொள்வார்கள் அதனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோர் தொடர்ந்து 3 அல்லது நான்கு ஆண்டுகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றது. நூற்றில் 3 பேர் அலட்சியத்தின் காரணமாகவே இறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஒரு துணை அவசியம். வலிப்பு நோய் வந்த 70 சதவீதம் பேர், மாத்திரை, ஊசிகள் மூலம் குணமடைகிறார்கள். 30 சதவீத பேருக்கு அறுவை சிகிச்சை முறை அவசியப்படுகிறது.
உண்மையில் முதலில் வலிப்பு வந்த நபருக்கு அருகில் ஏதேனும் கூர்மையான பொருட்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும். அடுத்து அவர் வாயினில் ஒரு கைக்குட்டை போன்ற துணியினை வைக்க வேண்டும். காரணம் அவர்கள் அவர்களை அறியாமல் நாக்கினையோ உதடுகளையோ கடித்து விடுவார்கள்.
அவர்களுக்கு காற்றோட்டம் உள்ளனவா என்று உறுதிசெய்து விடவேண்டும். கையில் இரும்பு போன்ற உலோகம் கொடுத்தால் அதுவே அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அவர்கள் கையினையோ கால்களையோ வலிப்பு வரும் சமயத்தில் யாரும் பிடிக்க கூடாது. இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கையே, மருத்துவ ரீதியாக பலன் ஏதும் கிடையாது.
No comments:
Post a Comment