சமூகப்பொதுவெளி செயற்பாட்டாளர்கள் இந்த தங்குநிலை வகிபாத்திரத்தில் அதிகம் சிக்கிக்கொள்கின்றார்கள். இது பலருக்கு பலபொழுதுகள் எப்போதும் சாதகமானதாக அமையப்பெறுவதில்லை. பெரும்பாலும் எதிர்வினை அல்லது இயங்கியல் தடங்களையே விளைவிக்கும் தூண்டியாக அமைந்துவிடுகின்றது.
மக்கள் மத்தியில் உறவாடும் நபர்களிடம் காணப்படவேண்டிய சமூகவியல் முதிர்ச்சியே ஆளிடைத்தொடர்பில் பேணப்படவேண்டிய ஒழுக்கவியல். இந்த உறவுமுறையில் எப்போது தளம்பல் ஏற்படுமோ அப்போது குறித்த நபரின் பொது செயலியல் முறைமை அதிர்வுகளை விளைவிக்கின்றது.
சுயாதீனம் என்ற பொருள் சற்று சிக்கலான நடைமுறை சொல்லாக நாம் காண்பதில்லை. குறித்த சொல்லின் நேரடிப் பொருள்கோடல் காண்பதே மானிட சுயாதீன சிந்தனை, செயலியல் முறைமைக்கு முட்டுக்கொடுப்பதாக அமைகின்றது.
எனவே சமூகப்பணியாளர்கள் (Social Activist) தங்களின் ஆட்புல எல்லைகளில் ஆதிக்கம் செலுத்தும் தரப்பார் விடயத்தில் மிக்கக்கூடிய கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல் உங்களிம் சுதந்திர பயணம் பறிக்கப்பட்டு பொம்மலாட்டபொம்மை நிலைக்கு ஆளாக்கப்படுவீர்கள்.
No comments:
Post a Comment