சமூக இயல்பு வாழ்வியல் நடைமுறையில் போட்டித்தன்மையோடும் ஒப்பியல் ரீதியிலான சமூக எடைபோடுதலிலும் தங்கியுள்ளது. இது முதலாளியத்தின் வெளிப்பாடாகும். இந்த முதலாளிய மேலாதிக்கம் ஒவ்வொரு தனிமனிதனுள்ளும் கண்டிப்பாக இருக்கும் இல்லை இருக்கவேண்டும். ஏனெனில் இந்த மனோவியல்தான் ஒருவனை மேலாண்மை செய்யும் திறன் விருத்தியை அளிக்கின்றது.
உங்களை சூழவுள்ள சுற்றாடல் எமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தும் ஒரே விடயம் இதுதான்....
உங்கள் வாழ்க்கை: போராட்டத்தின் மீது கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பிணைப்பு சமூகமட்டத்தில் தன்னலம் தாண்டிய பொதுநல வாதிகளின் க்கையிலும், அவர்களின் சில செயற்பாடுகளின் முதலீடுதான் மொத்த இயந்திரத்தின் சக்கரத்தையும் இயக்கும் வலுவை அளிக்கின்றது.
No comments:
Post a Comment