பொது முதலாளியம் தன்னைச் சார்ந்தவர்களை எப்போதுமே ஒரு தொழிலாளியாக மட்டுமே நோக்கும் அதேவேளை இந்த அடிமைத்துவம் வாதத்தை தொடர்ச்சியாக தக்கவைக்கவும் முயல்கின்றது. இதேவேளை இஸ்லாமிய முதலாளியம் தன்னைச் சார்ந்தவர்களை அடுத்த படிநிலைக்கு முன்னேற்றம் அளிக்கும் பக்குவத்தையும் பங்களிப்பையும் அளிக்கின்றது.
இஸ்லாத்தின் முதலாளித்துவ சிந்தனை சாதாரண கோப்ரேட் சிந்தனை வாதத்திலிருந்து வேறுபடும் அதேவேளை தனக்கான தனித்துவ அடையாளம், கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கவியல், பண்பாட்டியல்சார் நெறிமுறைகளை கற்பித்தல் செய்கின்றது.
ஒரு சமுதாயத்தின் பிரதான முதுகெலும்பாக காணப்படுவதே பொருளாதாரத்தின் நிலைத்தன்மை. எந்த ஒரு சமுதாயம் பொருளாதாரத்தில் தனது சுதந்திரத்தையும் அதன் பண்பாட்டையும் நுகர்ந்துகொள்ளுமோ அந்த சமூகம் தன்னை ஏனைய சமூகத்திலிருந்து உயர்ந்த நிலையை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும்.
சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் வாழும் சூழலில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை எப்போதும் பலமானதாகவும் உறுதியானதாகவும் காணப்படுதல் அவசியம். ஏனெனில் பொருளாதாரத்தின் பின்னணியை கொண்டே ஒரு சமூகத்தின் ஏனைய துறைகள் தீர்மானம் செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment