ஏதோவொருவகையில் ஒருவருக்கொருவர் இன்னொருவரில் தங்கோயே வாழ்கிறோம். இதற்கு பிரதானமாக மனிதர்களின் சமுதாய வாழ்க்கை முறையை காரணம் காட்டலாம். அநேக உயிரினங்களில் பெரும்பாலானவை கூட்டு வாழ்வில் தன்னை ஒரு அங்கமாக இணைத்துகொள்கின்றன. இதனால் அவ்வுயிரினங்கள் தங்களுக்குள் உள்ள வாழ்க்கைக்கான மூலாதார வளங்களை பங்கீடு செய்துகொள்கின்றன. உணவு, உரையுள், இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தனியனை விட சமூக வாழ்வில் அனுகூலங்கள் பல என்று இயற்கை உயிரிகளுக்கு எப்போதோ கற்றுக்கொடுத்துவிட்டது.
இயற்கையில் மனிதனின் சமுதாய வாழ்வியல் முறைமை சற்று முன்னேற்றமடைந்த கட்டமைப்பாக காணப்படுகிறது. இதில் வளப்பங்கீட்டுக்கு அப்பால் ஒரு மனிதனின் தேவைகள் இன்னொரு மனிதனில் அல்லது தான் வாழும் சூழலில் தங்கியுள்ளதை காணலாம். இந்த தேவைகளை நிவர்த்திசெய்வத்தில் அந்த மனிதனின் சமூக அடையாளம் பெரியதொரு வகிபாத்திரத்தை பெற்றுவிடுகின்றது. இவையனைத்தும் நம்பிக்கை என்ற உளவியல் பண்புசார் மனோவெழுச்சியை அடித்தளமாக கொண்டு கட்டியெழுப்படுகின்றது.
சமூக வாழ்வுமுறையில் மனிதன் ஒன்னொரு மனிதனில் வெளிப்படுத்தும் நம்பிக்கைதான் தொடர்ச்சியான மானிட உறவை நிலைப்பேரடையச் செய்கின்றது. எப்போது இந்த நம்பிக்கை வலுவிழக்குமோ அப்போது இந்த கூட்டு வாழ்வுமுறை பிணைப்பு சிக்கலுக்கு உள்ளாகின்றது.
விலங்கு வாழ்வியலில் இருந்து பாகுபடுத்தப்படும் இந்த மானிட உளவியல் ரீதியான தன்மைகளோடு அறிவு, ஆளுமை மற்றும் பொருளியல் காரணிகளும் தாக்கம் செலுத்தியே வருகின்றது. மானிட சமூகக்கூட்டு ஈடுபாட்டு முறை நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றமையும் எவ்வளவு அழகானதாக உள்ளது பாருங்களேன்....
No comments:
Post a Comment