இதேவேளையில் தான் சம்பாதித்த கௌரவம் அந்தஸ்து மற்றும் மரியாதை என்பவற்றை தக்கவைக்க ஒரு மனிதன் தனது உச்சகட்ட அர்ப்பணிப்பையும் மனித துர்குணாதிசயங்களையும் வெளிப்படுத்த தயங்குவதில்லை. இதனால்தான் உயர் அந்தஸ்து அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தொடர்ந்தும் தக்கவைக்க போராடுவதை அவதானிக்க முடிகின்றது. இது பொதுவாக மனித இயல்பாகும். இந்த இயல்பு ஆரம்பத்தில் குறைவாக இருந்தபோதும் படிப்படியாக அவனது முன்னேற்றம் மேலும் விஸ்தீரணமடைந்து செல்லச்செல்ல இந்த இயல்பும் வளர்ச்சியடைந்த வண்ணம் இருக்கின்றது.
உதாரணமாக ஒரு செல்வந்தன் தனது செல்வத்தை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செலவழிப்பதற்கு ஒரு தடை இந்த சமூக அந்தஸ்து. ஏனெனில் சடுதியாக சமூக அந்தஸ்தையும் அதிகாரங்களை பெற்றுக் கொள்பவர்கள், தங்களின் கடந்தகால அனுபவத்தை எண்ணியெண்ணி தங்களை தாங்களாகவே ஒதுக்கி கொள்கின்றார்கள்.
செல்வங்கள் என்று சொல்லும்போது பொதுவாக எல்லோரும் நினைப்பது பணம் சொத்து இதர ஆடம்பர வாழ்க்கைக் கோலங்களையுமே. ஆனால் உண்மையில் செல்வங்கள் பொருத்தமட்டில் அது ஒரு மனிதனுடைய அறிவு ஆற்றல் மற்றும் உடல்ரீதியான ஆரோக்கியம் ஆளுமைகளை குறிப்பதாகும். மேலே நாம் பார்த்த அச்சப்படும் காரணிகள் உலக வாழ்க்கையில் அனைவராலும் கருதப்படும் செல்வங்களை குறித்ததாகும். இதற்கு எதிர்மாறாக ஒருவனின் ஒரு ஆன்மாவின் ஆற்றல் தான் வெளிப்படுகின்ற சூழலில் வெளிப்படையாக வெளிப்படுத்த எப்போதுமே அச்சம் ஒரு தடையாக இருப்பது கிடையாது.
இதனால்தான் சாதாரண ஒரு சிந்தனைவாதி செயற்பாட்டாளனும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த மனிதர்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றான். இறைவன் அளிக்கின்ற அருட்கொடைகள் பொருத்தமட்டில் மேற்கூறிய இரண்டும் அருட்கொடையாகவே கருதப்படுகின்றது. யார் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளை கொண்டு சக மனிதர்களுக்கு பயனுடையதாக வாழ்ந்து மரணிக்கிறார்கள். அவர்கள் இந்த பூமியின் வாழ்க்கையை திறன்பட திட்டமிட்டவர்களாக கருதப்படுகின்றார்.
No comments:
Post a Comment