ஒரு பிரச்சினை எழும்போது அதற்கான மூலம், அதன் பின்னணி என்று அடையாளம் காட்டும் தனித்துவ குறிகாட்டிகளை (Unique Indicators) கூட நாம் ஆராய்வது கிடையாது. அத்தோடு ஒரு பிரச்சினையை எப்போது, இத்தருணத்தில், எவ்வாறு கையாளவேண்டும் என்ற அடிப்படை பொதுப்புத்திக்கூடா இல்லாத மந்தைகளாக ஏதோவொரு கைத்தடிக்கு கட்டுப்பட்டு எமது பாதைகளையும், பசிக்கான மேச்சல் தளங்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
சமூகவலைத்தள உரையாடலில் நாம் எந்த அளவிற்கு பெரும்பான்மை சமூகத்துடனான தொடர்பையும், அங்குள்ள துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடலையும் (Intellectual Dialogue) மேம்படுத்தியுள்ளோம் என்பதற்கான விடையே போதுமானது நாம் எந்த அளவிற்கு இந்நாட்டின் தேசியவாத அமுலாக்கத்தில் பங்குகொள்கின்றோம் என்று...
எதையெடுத்தலும் இன்னொருவன்மேல் குற்றம்சாட்டி தாங்கள் தம்பிக்கும் ஒருவகை இயலாமை மற்றும் கோழைத்தனமான உளவியல் போக்கு எம்மை ஆட்கொண்டுள்ளதை உணரமுடிக்கின்றது. அறிவுசார் சிந்தனை வட்டங்களையும் அதனூடான பிராந்தியம் தொடக்கம் தேசியம் வரையிலான அடிப்படை உரிமைக்கான அதிர்வலைகளை உண்டாக்க பின்னடித்துக்கொண்டு இன்னொரு சாராரை சாடிநிற்க்கும் அனாதை சமூகமாக எம்மைநாம் முத்திரையிட்டுக்கொண்டோம்.
எந்த அளவுக்கெனில் நாங்கள்தான், தங்களால்தான், எங்களைவிட்டால் ஆளில்லை என்று கொக்கறித்தவர்கள் இப்போது ஊமையாகிவிட்டார்கள். சர்வதேச தொடர்புடமையை கொண்ட அரசியல்வாதிகள்கூட அழுத்தங்களை அளிக்கமுடியாத அளவிற்கு அடக்கி ஆளப்படுகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் தங்களின் அன்றாட நடவடிக்கையை மகிழ்ச்சியாக செய்து கொண்டுள்ளார்கள். இடைத்தட்டு வர்க்கத்தாரே பாவம்...
எல்லாவற்றிலும் இவர்களின் வகிப்பாகமே தங்கிநிற்கின்றது...
No comments:
Post a Comment