புகைப்படப்பிடிப்பாளார்கள் மூலமாக உலகின் பல திருப்புமுனையான நிகழ்வுகள் உலக மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. இலக்கியம் மற்றும் நவீன செய்தி மூலம் என்பவற்றின் புதிய பரிணாமமாக புகைப்படங்களையும் நவீன இலக்கிய கலைஞர்களாக புகைப்பட பிடிப்பாளர்களையும் கருதமுடியும். இருந்தபோதும் பாரம்பரிய சிந்தனை வறட்சியின் விளைவாக இவர்களுக்கான மதிப்பு மரியாதை இன்னும் சமூக அவையில் அளிக்கப்படவில்லை என்பது துரதிஷ்டம்தான்.
சமூக அதிர்வுகளில் பேசும் படங்களின் தாற்பரியம் மிக அண்மைய காலங்களில் ஆதிக்கம் செலுத்திவருகின்றது. குறிப்பாக பாரம்பரிய பண்பாட்டியல் அம்சங்களின் ஆவணமாக்கல், சமூகவியல் சார்ந்த பிரச்சினைகளை முன்மொழியும் தன்மையும், உயிரியல், சூழலியல் சார் புகைப்படங்களும் இதில் பிரதான வகையில் உள்ளடக்கமுடியும்.





பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் பதிவு கலாசார திணைக்களம் மூலமாக இடம்பெறுவது வழமை. இதனையும் குறித்த நபர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் அரசினால் அளிக்கப்படும் அங்கீகர அடையாள அட்டை உங்களுக்கு இதனூடாக கிடைக்கப்பெறும். அந்தவகையில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த வளர்முக புகைப்படப்பிடிப்பாளர்களின் அறிமுகத்தை இந்த ஆக்கத்தினூடாக நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
பல திறமை வாய்ந்தவர்களுக்கான அவர்களின் திறமைக்கான பொருத்தமான மற்றும் நவீனத்துவம் வாய்ந்த புகைப்பட உபகரணங்கள் (Photography Tools) இன்மை காணப்படுகின்றது. சிலரது புகைப்பட தொகுப்புகளை ஆவணம் செய்வதோடு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையிலான கண்காட்சி முறைமை ஒழுங்கு செய்யப்படவேண்டும். எம்மவர்களின் புத்தாக்க முயற்சிக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு அவர்களை வழிப்படுத்தவேண்டிய முன்னோடிகள் முன்வந்து அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லவேண்டும்.
Previous article
https://www.facebook.com/111896563906866/posts/169079734855215/
No comments:
Post a Comment