ஆற்றலை பொறுத்தமட்டில் தனித்துவ திறமைகள், பண்புகள் அவன் வாழ்கின்ற சூழலை காட்டி அதனை அடைந்துகொள்கிறான். ஆனால் வளங்கள் சற்று வித்தியாசமான முறையில் நுகரப்படுவதனால் ஒரு தளத்தில் இருந்து இன்னுமொரு தளத்துக்கான மானிட அடையாளம் வேறுபட்டு காணப்படுகின்றது.
சூழலில் ஆளிடைத்தொடர்போடு பகிரப்படும் வளங்களும், ஆற்றல்களும் அவன் சார்ந்துள்ள சமூக அங்கத்தவர்களை ஏதோவொரு சென்றடைகின்றது. இதற்கு நேர் மறை விளைவுகள் தோற்றுவிக்கப்படுவது இயல்புதான்.
இந்த சமூகவியல் தொடர்புடமையில்தான் குறித்த சூழலில் இயங்குநிலை தொடர்ச்சியும் அதனூடாக விளைவுகளையும் தொழிற்பாட்டு நிலையில் இருப்பதனை எம்மால் காணமுடிகின்றது. ஒரு மனிதனின் சக்திற்கு உட்பட்ட விதத்தில் அவனது வெளிப்பாடுகள் அமையும். இதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதுதான் பன்மைத்துவம் என்பது. இந்த ஏற்றத்தாழ்வினால் ஒரு மனிதனின் அடிப்படை வாழ்க்கை கோலம் அந்தஸ்தை அடைவது கிடையாது. ஆனால் எம்மில் பலர் இதனை ஒரு எடுகோளாகக்கொண்டு சமூக அந்தஸ்து அதிகாரங்களை வகைப்பாடு செய்வது முட்டாள்தனமாகவே கருத்தவேண்டியது...
No comments:
Post a Comment