தேசிய அரசியல் மைய நீரோட்டத்தில் சாதாரணமாக மிதக்கும் சருகுகள் தான் இவர்கள். கடந்தகாலங்களை போன்று சர்வதேச அரசியலுடன் உள்நாட்டு அரசியலை சமாந்தர போக்குடன் கையாளும் அரசியல் ஆளுமைகளை நாம் இன்னும் நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்யவில்லை என்றுதான் அண்மைய கசப்பான சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
சுகபோக வாழ்விற்கும், கட்சியின் அரியணை பீடத்தையும் தக்கவைக்க ஆளுக்கொரு அரசியல் ஆசனம் என்றும் கொடிகளும் கொள்கைகள் என்றும் துண்டாடப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தின் மக்கள் வயப்படாத அரசியல் நகர்வுகள் எந்த அளவில் அடிமட்ட பாமரன் மீதான தேவைகளை நிறைவு செய்துள்ளதோ தெரியவில்லை.
பௌலோவின் நாய்களை போன்று தேர்தல் மணி அடித்ததும் பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அரசியல் அதிகார பகிர்வுகள் தொடர்பிலான கோஷமும் தர்க்கங்களும் எம்மை மதி மயக்கி விடுகின்றது. உண்மையில் அந்த நாய்களை போன்று மணிக்கு இசைவாக்கப்பட்டு எச்சில் ஊரும் சாதாரண ஜீவன்கள்தான் எமது சமுகம்.
அரசியலில்தான் இந்த நிலையென்று பார்த்தால் எல்லா துறைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
No comments:
Post a Comment