ஒரு மனித சாகியத்தின் அடிப்படை கட்டமைப்பு தொழிற்பாட்டியல் அலகாக தனியன் கருதப்படுகின்றான். அத்தோடு மானிட வாழ்வியல் எப்போதுமே சமுதாயம் சார்ந்தே இயங்கும் நிலைக்கு கட்டமைக்கப்பட்டிள்ளது. தனிமனிதன் செலுத்தும் தாக்கம் ஒட்டுமொத்த சமூகத்தின் மொத்த இயக்கத்திலும் மாறுதலை கொண்டுவரும் அளவிற்கு சாதாரண அடிமட்ட மானிடர் பங்குபற்றுதல் அமையப்பெற்றுள்ளது.
ஏதோவொரு வகையில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான சமுதாய பங்குபற்றுதலை தன் அன்றாட தொழிற்பாட்டியல் சூழலில் ஊர்ஜிதம் செய்தவண்ணமே உள்ளான். இருந்தபோதிலும் அந்த இயங்குநிலை மட்டம் எந்த அளவிற்கு மக்களுக்கும் அவனது சமூகத்திற்கும் பயனளிக்கும் விதமாக வெளிப்படுத்துகை அடைகின்றதோ அதனை பொறுத்தே ஒரு மனிதனின் சமுதாய பங்குபற்றுதல் பரவலாக்கம் செய்யப்படுகின்றது.
சமுதாய மற்றதின் தனிமனித வகிபாகம் அவனது அன்றாட வாழ்வியலின் பிரதான பங்காக அமைகின்றது. இதில் இருவகை உண்டு.
1. சக்தி (திறன்/அறிவு/ஆற்றல்/ஆளுமை) சார்ந்தவை - தன்னிடம் உள்ளதை அளிப்பதும் தனக்கு தேவையானதை கிரகித்து நுகர்ந்து கொள்வது.
2. சடப்பொருட்கள்சார்தவை - வளங்களை பகிர்ந்தளிப்பு செய்வதும்பயன்படுத்திக்கொள்வதும்.
குறித்த இரு சூழலியல் நடத்தையிலும் நாம் ஒவ்வொருவரும் பங்குகொள்கிறோம். இதனைத்தான் சமூக மாற்றத்தின் பங்குபற்றுதல் என்று குறிப்பிடுவோம். ஆனால் இந்த பங்குபற்றுதல் மக்கள் அவையில் உண்டாக்கும் நேர் எதிர் அதிர்வுகளை பொறுத்தே உங்களின் பங்குபற்றுதல் ஆதரிக்கப்படுதலும் எதிர்க்கப்படுதலும் தீர்மானம் செய்யப்படுகின்றது. ஒரு சுற்றாடலில் ஆதரிக்கப்படும் பங்குபற்றுதல் மற்றொரு சுற்றாடலில் எதிர்க்ப்படலாம். இதுபோன்று எதிர்க்கப்படுவது ஆதரிக்கப்படலாம். இவை குறித்த சுற்றாடலின் அறிவு, பண்பாட்டியல், நாகரீக பரிணாம வளர்ச்சியை பொறுத்து கணிப்பீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment