திரைப்படங்களை பொருத்தமட்டில் தமிழ் சினிமா திரைப்படங்கள் அதிக அளவு இலங்கையில் வரவேற்பு பெற்றுள்ளன. இதற்கு பிரதான காரணமாக இலங்கையின் தேசிய மொழிகளில் தமிழ் மற்றும் சிங்களம் அமைந்துள்ள போதும் சிங்கள சினிமாக்கள் நாடளாவிய ரீதியிலான இலங்கை மக்களுக்கு பாரியதொரு சமூக மாற்றத்திற்கு வித்திடவில்லை. அத்தோடு பெரும்பான்மை சமூகத்தை மட்டும் திருப்திப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இந்த பின்னணியோடு தமிழ் சினிமாக்கள் இலங்கையில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளமைக்கு பிரதான காரணமாக நோக்க முடியும். அவ்வப்போது தென்னிந்திய சினிமாக்களில் பேசுபொருளாக மாறுகின்ற கதைகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்கு உட்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனூடாக திரைப்படத்தின் இலவச விளம்பரப்படுத்தல் பிரதான செல்வாக்கு செலுத்துகின்ற போதும் ஒரு திரைப்படம் சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் எல்லாத் துறைகளிலும் அலசி ஆராயப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இருந்தபோதும் கலை இலக்கிய வடிவத்தின் நவீன பரிணாம வடிவங்கள் நோக்கப்படும் அசையும் படங்கள் அதாவது குறுந்திரைப்படங்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை போன்றவை உள்ளடக்க முடியும். சினிமாக்கள் குறித்தான தனிமனித நேர்மறை விமர்சனங்கள் எப்போதும் ஒரு தளத்தில் மட்டுமே குறிவைக்கப்படுகின்றது. குறிப்பாக இலக்கிய வடிவமாக அரசியல் வடிவமாக மற்றும் சமூகத்தில் பெண்கள் சார் நிலையிலான பின்னணியைக் கொண்ட ஒப்பிடப்படுகிறது.
உண்மையில் சினிமாக்கள் ஒரு சமூகத்திற்கு முன்வைக்கின்ற பல நடைமுறை சார் தெளிவூட்டல் தருகின்றபோதும் உலகளாவிய ரீதியாக காணப்படுகின்ற முதலாளித்துவக் கொள்கையும் அதனூடான சமூக மட்டத்தில் காணப்படுகின்ற பன்மைத்துவ வேறுபாடுமே பிரதான பேசுபொருளாக எப்போதும் அவதானிக்க முடிகின்றது.
கலை இலக்கியம் பண்பாட்டியல் அம்சங்களை கடந்த மனித வாழ்வியலின் ஒவ்வொரு கட்டங்களும் தனிமனித வேறுபாடுகள் பிரதான பேசு பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் சமூக மட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனுடைய இயங்குநிலை தளம் போராட்டம் வாழ்வியல் முயற்சியும், பயிற்சியும் உண்மையில் பல்வகைமை கொண்டது. இதை ஒரு திரைப்படத்தின் ஊடாக ஒட்டுமொத்த தனிமனிதனுக்கும் ஒரு உந்துதல் அளிக்கும் ஆலோசனை குப்பைகளாக மற்றும் வரட்டு சிந்தனையாகவும் தற்போது மறைந்துவிட்டது.
மிக அண்மைய நவீன தொடர்பாடல் சமூக வலைத்தளங்களின் ஊடாக உருவான ஒரு கலாசாரமாகும். அண்மைய தென்னிந்திய சினிமாக்கள் பெரும்பாலும் நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் சமூகவியல் சார்ந்து தனது கருத்துக்களை மக்களுக்கு திணிப்பதாக தோன்றுகின்றது. ஏனெனில் இந்திய கலாசாரங்களை பொறுத்தமட்டில் நாம் காணும் செய்தி உலகில் ஒரு தெளிவான சமூகக் கட்டமைப்பையும் மானிடவியல் பண்பாட்டியல் கலாச்சாரங்களுக்கு முரணான மனித வரட்டு குணங்களையும் காட்டுவதாகவே அமைகின்றது. மேற்கத்திய சிந்தனை வாதத்துக்கும் கீழத்தேய சிந்தனை வாதத்திற்கும் இடையிலான ஒரு பனிப்போர் இந்த சினிமாக்களின் ஊடாக வெளி காட்டப்படுகின்றது.
உண்மையை உண்மையாக வழிகாட்டும் மேலத்தேய சினிமாக்களில் பண்பு உண்மையைப் பொய்யாகவும் சித்திரமாகும் சித்தரிக்கும் மற்றும் திணிப்பு செய்யும் கீழத்தேய சினிமாக்களின் பண்பும் வேறுபட்ட தளத்தில் நோக்கப்பட வேண்டியவை. இந்த பின்னணியோடுதான் இவை விவாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சினிமா சார்ந்த தலைப்புகள் குறித்த துறையும் அனுபவம் சார் பகலின் ஊடாக பகிர்வுகள் மூலமாக இதனை நாம் முன்வைக்க எத்தனிக்கின்றோம் என்பதுவே இங்கு நாம் பேச வேண்டியது. ஏனெனில் எல்லோரும் கருத்து சொல்கிறார்கள் என்ற பொதுவுடமை கருத்து சுதந்திரத்தை இங்கு உள்ள பலர் துஸ்பிரயோகம் செய்வதாகவே சமூக ஊடகங்கள் அமைகின்றன.
No comments:
Post a Comment