"தக்கானபிழைத்தல் தகாதனமடிதல்
மனிதன் எப்போதுமே இயற்கையில் தன்னை தங்கவைத்துள்ள ஒரு உயிரிதான். அவன் என்ன நவீன தொழிநுட்ப அறிவியல் முன்னேற்றம் அடைந்தபோதும் அவன் இயற்கையை விட்டு தூரமாகியது கிடையாது. இந்த உண்மை உங்களுக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக கூட இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.
நுண்மமான அடிப்படை கட்டமைப்புகள்தான் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் ஆகியுள்ளது. அவ்வாறான அடிப்படை துணிக்கைகளை மனிதனும் சரி நுண்ணங்கியும் சரி ஏன் இதர சடப்பொருட்களும் கொண்டுள்ளதுதான். இதனால்தான் சூழலில் எம்மால் நிலைத்திருக்க முடிகின்றது.
மனித உடலில் நுண்ணங்கி ஒவ்வொரு கணமும் தொற்றுதல் தாக்கத்தை ஏற்படுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் ஏன் எமக்கு எதுவும் ஆகுவதில்லை???
இதற்கு காரணம் எமது உடல் அதனை எதிர்த்து முறையடிப்பதுதான்....
அதுபோலவே எல்லா நுண்ணங்கிக்கும் எமது உடல் எதிர்ப்புத்திறனை காண்பிக்கும் வல்லமை கொண்டுள்ளது. அதிலும் ஒரு நுண்ணங்கியை எதிர்க்கும் ஆற்றலை குறித்த நுண்ணங்கி எதிர்ப்புதிறன் மூலமாக மட்டுமே உண்டாக்கமுடியும். ஆக எமது உடலில் ஒரு நுண்ணங்கி தொற்றுதல் அடைந்து மீள்வதனூடாகவே குறித்த நோய் எதிர்ப்பை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த ஆற்றல் மனிதனுக்கு மட்டுமல்ல குறித்த நுண்ணங்கிக்கும் உண்டு.
கொரோனா நுண்ணங்கியை உலகில் இருந்து முழுமையாக அழித்துவிட முடியாது. எனவே இதற்கான தீர்வுதான் என்ன???
நாம் அந்த நுண்ணங்கியை எதிர்த்து போராடவேண்டிய உடலியல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவேண்டும். இதைத்தவிர சுத்தமான நீர், போசாக்கான உணவுப்பழக்கம், தன்னிலை சார் சுகாதாரம், சுற்றாடல் சார்ந்த கவனம் என்பன முக்கிய இடத்தை பெறுகின்றது.
நோயைக்கண்டு வரண்டோடுவதை விட அதை எதிர்ப்பதற்கான சக்தியை உண்டாக்கிக்கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்கவேண்டும்.
No comments:
Post a Comment