புகைப்பட இலக்கியங்களை பொருத்தமட்டில் அவை தனது தளத்தில் பல்வேறுபட்ட சிந்தனை ஆக்கத்தையும் பொருள் ஆக்கத்தையும் முன்வைக்கின்றது சித்திரங்களும் புகைப்படங்களும் சமாந்தர போக்கி காண்பித்த போதும் சித்திரங்களிலும் பார்க்க புகைப்படங்களின் எதார்த்தமான வாழ்வியல் பதங்கள் தெளிவாக வெளிக்காட்ட முடியும். சமூக மட்டத்தில் புகைப்பட கலைஞர்களை இலக்கியவாதிகள் வட்டாரத்தில் உள்ளீர்ப்பு செய்வதில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. இந்த வெற்றிடம் ஒரு வகை பாரம்பரிய சிந்தனைவாதிகளின் வறட்டு பிடிவாதமாக கூட இருக்கலாம்.
இலக்கிய உலகம் மிக பிரம்மாண்டமான கூறுகளை வெளிப்படுத்துகின்ற ஜால உலகமாகும். இந்த உலகத்தில் நுழைகின்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் தனித்துவமான இயங்குநிலை சக்தி உண்டென்ற ஏற்றுக்கொள்ள வேண்டும். இலக்கியம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வரம்பெல்லைக்குள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியதொன்றல்ல.
பண்டைய காலத்தில் மனிதன் தனது இலக்கியத்தை சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வெளிக்காட்டினான். பின்னர் இந்த நடைமுறையில் ஏற்பட்ட கூர்ப்பு முன்னேற்றம் இலக்கியத்திற்கான கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உண்டாக்கியது. ஆனால் நவீன உலகின் இலக்கியம் வேறொரு பரிமாணத்தில் நோக்கப்பட வேண்டிய நிலையை எட்டியுள்ளது. இந்நிலையை நாம் புகைப்பட இலக்கியம் என்று சொல்லிவிடலாமா?
வளர்ந்து வரும் நவீன தொடர்பாடல் முறைகளுக்கேற்ப இலக்கியம் தனது பரிணாமத்தை வெவ்வேறுபட்ட தளத்தில் வியாபிக்கிறது. புகைப்படங்களை பொருத்தமட்டில் அவை நிஜ வாழ்க்கையின் சமூக சித்திரங்களை வெளிக்காட்டும் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்கின்றது. இந்த கதாபாத்திரத்துக்கு உயிர் ஊட்டும் ஒரு படைப்பாளியாகவே புகைப்பட கலைஞர்கள் கருதப்பட வேண்டியவர்கள். வெறுமனே புகைப்பட கலைஞர்களை இலக்கிய உலகத்துக்குள் பிரவேசிக்க விடாமல் அவர்களை நாம் எம்மச்சாரா தரப்பாக நோக்கப்படுவதன் விளைவுதான் இலக்கியத்தின் மீதான பேராற்றலையும் அதன் வெளிப்படு தன்மையையும் நாம் புரிந்துகொள்ள தவரிவிட்டோம்.
எனவே வளர்ந்து வரும் புகைப்பட கலைஞர்களை இலக்கியவாதிகள் என்ற தரப்படுத்தலில் நாம் நோக்கி அவர்களுக்கான அங்கீகாரம், அந்தஸ்து அளிக்கப்படும் போதும் இலக்கியத்தின் மீதான அடுத்த படிநிலையை எம்மால் உணர்ந்திட முடியுமாகும்.
No comments:
Post a Comment