இதேவேளை அதீத மனோவெழுச்சி தன்னம்பிக்கையும் ஒருவனை இயலாமை ஆக்கிவிடுகின்றது. ஏனெனில் தாழ்வு மனப்பாங்கு மனோநிலை கொண்டவன் அவனது அடைப்புகளை கூட பின்னடைவாகவே கருதுகின்ற அதேவேளை அதீத உயர்நிலை மேட்டுக்குடி போக்குகொண்ட ஒருவன் தனது பின்னடைவுகளை கூட அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போகின்றது.
எந்தவொரு சாதனையாளனுக்கும் அவனது வெற்றியின் பின்னணி அவனது தன்னம்பிக்கையும் சமுதாயத்தில் தானும் ஏனையவர்கள் போன்று சமத்துவம் மற்றும் அங்கீகாரப் பங்குபற்றுதல் கொண்டவன் என்ற மனோவியல் ஆற்றலை உறுதியானதாக காணப்பட்டிருப்பதை அடையாளங்கண்டு கொள்ளலாம்.
மிதமான சமுதாய முதிர்ச்சியும் அதனூடாக தனது சமூக பங்குபற்றுதலும் எப்போதுமே தன்னளவில் திருப்தியையும் ஆரோக்கியமான நடைமுறை வாய்ப்புகளையும் சாதகமாக்கும். இதனை சரியான தருணத்தில் யார் உணர்ந்து தனது அறிவு மற்றும் ஆற்றலை பிரயோகம் செய்கிறார்களோ அவர்கள் மக்கள் மத்தியில் தனது ஆன்மாவின் தனித்துவ திறனின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துகின்றார்கள்.
No comments:
Post a Comment