சமூகசேவையில் ஈடுபடுபவர்கள் மிக முக்கியமாக கொண்டிருக்கவேண்டிய உளவியல் மற்றும் ஆளுமை பண்புதான் ஒரே துறையில் பணியாற்றுபவர்களை ஊக்குவித்து மனமுடைந்த வாழ்த்து சொல்லும் குணம். இந்த குணம் அவ்வளவு இலகுவாக பெற்றுக்கொள்ளும் ஒரு பண்பன்று. மாறாக உங்களின் சமூக முதிர்ச்சியை பொறுத்து இந்த குணத்தின் வெளிப்பாடு உண்மைக்கு உண்மையாக அமையக்கூடையதாக இருக்கும்.
பொதுவாக இந்த மனோபக்குவ முதிர்ச்சி நிலையை மக்கள் அவைகளின் பணியாற்றும் சமூக சிந்தனையாளர்கள், சேவையாளர்களிடத்தில் காண்பது மிகவும் அறிதாகவுள்ளது. இப்போதெல்லாம் போட்டி, பொறாமை, நயவஞ்சகம், வெறுப்புணர்வு, குற்றம் காணும் திறன், விட்டுக்கொடுக்காமை, சுயநலம் போன்ற துர்நாடத்தை குணங்களையே நுகர்ந்துகொள்ள முடியுமாகின்றது. சமூகப்பணியில் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால் அது இறைவன் உங்களை தேர்வு செய்துள்ளான் என்ற இறையியல் சிந்தனை இருக்குமானால் உங்களின் அனைத்து நல்ல காரியங்களும் இபாதா (வணக்கம்) ஆக மாறிவிடும்.
"நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு அழகான நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” (அல்-குர்ஆன் 38:24)
No comments:
Post a Comment